Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலா, ஸ்மிரிதியை அடுத்து.. திமுகவை சரமாரியாக தாக்கி பேசிய மோடி.. விளாசல்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவர் இது இந்தியா பற்றிய பிரச்சனை அல்ல தமிழ்நாடு பற்றியது என்று ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார் பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சனம் வைத்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

 PM Modi also thrashes DMK and Tamil Nadu in his non confidence speech in Lok Sabha today

இதையடுத்து தற்போது லோக்சபாவில் பிரதமர் மோடி விளக்கம் அளித்து வருகிறார். அதில், கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள் விமர்சனம் செய்வதில் மிக கீழ் தரமான நிலையை எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன. எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை, வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் என்னையே குறி வைத்து அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் பொழியும் அவதூறுகள் எனக்கு டானிக் போல உள்ளன. அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வருகிறோம்.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும். கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது. இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை. இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆஸ்ட்ரிச் மன நிலையில் இருக்கிறார்கள். தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தங்கள் தலையை மறைத்துக் கொள்வதன் மூலம் தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

2028ம் ஆண்டும் எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும். நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்ததில்லை என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதையடுத்து மணிப்பூர் பற்றி பேசுங்கள் மணிப்பூர் பற்றி பேசுங்கள் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய மோடி தமிழ்நாடு பற்றியும் விமர்சனம் வைத்தார். அதில், தமிழ்நாட்டை எதிர்க்கட்சிகள் இந்தியாவிலிருந்து பிரித்து பேசி வருகிறார்கள் விவாதத்தில் அனைவரது கருத்தையும் கேட்டேன். இந்த வாய்ப்பை கடவுள் கொடுத்த வாய்ப்பாக கருதுகிறேன்.

2 தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவர் இது இந்தியா பற்றிய பிரச்சனை அல்ல தமிழ்நாடு பற்றியது என்று ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார் பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்.

 PM Modi also thrashes DMK and Tamil Nadu in his non confidence speech in Lok Sabha today

வட இந்தியா தான் 'இந்தியா' என்கிறார் திமுக அமைச்சர் ஒருவர்; தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லையா?; ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் ஆகியோர் பிறந்த தமிழ்நாட்டை எப்படி பிரித்து பார்க்க முடியும்?, என்று மோடி பேசி உள்ளார். சமீபத்தில் இந்தியா, வடஇந்தியா குறித்து ஏ வ வேலு பேசியதை விமர்சனம் செய்து பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு விமர்சித்து உள்ளார்.

திமுக : நாடாளுமன்றத்தில் நேற்று நடத்த விவாதத்திலும் சரி, இன்று நடத்த விவாதத்திலும் சரி.. தொடர்ச்சியாக திமுகவை பாஜக அமைச்சர்கள் தாக்கி பேசினார்கள். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்திருந்தாலும் கூட.. திமுக மீதுதான் கடுமையான தாக்குதல் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்த விவாதத்தில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அதில், மாற்றம் என்பது வார்த்தைகளால் உருவாகக் கூடாது- நடைமுறைகளின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்கு கனவுகளில்தான் உங்கள் வாக்குறுதிகளைக் காட்டின. நாங்கள் அந்த கனவுகளை நிறைவேற்றி காட்டுகிறோம். 2014, 2019-ல் மக்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை மேற்கொண்டிருந்தனர். அடுத்த 2024 தேர்தலிலும் இதே நிலைமைதான் இருக்கப் போகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டதைப் போல எதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரை இந்தியா என மாற்றினீர்கள்? என்ன அவசியம்?.

நாம் திராவிடர் அல்லர்- நாம் தமிழர்- நம் தாயகம் தமிழ்நாடு- திராவிடம் அல்ல- அந்தணர் ஆரியர் அல்ல என சிலப்பதிகாரம் சொல்வதாக ம.பொ.சிவஞானம் கூறியிருக்கிறார். சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர் பிரதமர் மோடி. ஒரே பாரதம் உன்னத பாரதம் என சொன்னது சிலப்பதிகாரம்- அதை செயல்படுத்துகிறார்.

திரெளபதி பற்றி பேசுகிறீர்களே. ஜெயலலிதாவின் சேலையை தமிழ்நாட்டு சட்டசபையில் துகிலுரித்தீர்களே. ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கியது திமுக. ஜெயலலிதா சபதம் எடுத்து முதல்வரான பின்னரே சட்டசபைக்கு வந்தார். 1989 மார்ச் 25-ந் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக, என்று திமுகவை விமர்சனம் செய்து நிர்மலா சீதாராமன் பேசினார்.

 PM Modi also thrashes DMK and Tamil Nadu in his non confidence speech in Lok Sabha today

நேற்றும் திமுக மீது விமர்சனம்: நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் அமைச்சர் ஸ்மிரிதி இராணி திமுகவை விமர்சனம் செய்தே பேசினார். நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார். இதில் தமிழ்நாடு பற்றி அவர் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் தனது பேச்சில், நீங்கள் இந்தியா இல்லை, ஏனெனில் இந்தியா என்பது ஊழல் இல்லை. இந்தியா என்பது வாரிசு அரசியலில் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக இந்தியா என்பதை மெரிட் அரசியலை, தகுதியை விரும்புகிறது . உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் சொன்னதை இன்று நினைவில் கொள்ள வேண்டும் - இந்தியாவிலிருந்து வெளியேறு. இந்தியா ஊழலிருந்து வெளியேறு , இந்தியா வாரிசு அரசியலில் இருந்து வெளியேறு, இந்தியா கூட்டணி இதில் இருந்தெல்லாம் வெளியேற வேண்டும்.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் மிக மோசமான பேச்சுக்கு எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தியா கிடையாது, நீங்கள் ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள். மணிப்பூர் பிரிக்கப்பட்டதாக, பிளவு அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறினார். மணிப்பூரை பிரிக்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. பிரிக்க முடியாது.

நீங்கள் மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். எங்களை பற்றி பேசும் முன் உங்கள் கூட்டணி திமுக பற்றி பேசுங்கள். ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி.தமிழ்நாட்டில் உங்கள் கூடவே இருக்கும் திமுகவை பாருங்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டீட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர்களுக்கு எப்போது நீதி வழங்குவீர்கள்., என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+