மேஜர் அறிவிப்பு.. 8வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல்.. மோடி அதிரடி.. உயரும் சம்பளம், ஓய்வூதியம்!
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழவை அங்கீகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பல லட்சம் ஊழியர்கள் இந்த அறிவிப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை மாற்றியமைக்க 8 வது ஊதியக் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் எடுத்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

7வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2026ல் முடிவடைகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக பலன் கிடைக்கும்.
2025 ஆம் ஆண்டில் புதிய ஊதியக் குழுவை அமைப்பதன் மூலம் ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவதற்குள் அதன் பரிந்துரைகள் செயலுக்கு வருவது உறுதி செய்யப்படும்.
8வது ஊதியக்குழு சம்பளம் உயரும்:
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 6வது ஊதியக் குழுவில் 7,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாய் கிடைக்கிறது.
8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளம்: இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.
7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 ஃபிட்மென்ட் காரணி உள்ளது. இது 8வது ஊதியக்குழுவில் குறைந்தது 2.86 பிட்மென்ட் காரணியாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2.86 என்ற ஃபிட்மென்ட் காரணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ. 51,480 ஆக இருக்கும், இது தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் உயர்வு ஆகும்,
8வது ஊதியக்குழு: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு வலுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.












Click it and Unblock the Notifications