Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீக்கான மோடி.. அகற்ற முடியாத பாஜக வீழ்ந்தது! சர்வதேச மீடியாக்கள் தேர்தல் முடிவு பற்றி சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றி சர்வதேச மீடியாக்கள் பல முக்கியமான செய்திகளை வெளியிட்டு உள்ளன.

2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றி சர்வதேச மீடியாக்கள் பல முக்கியமான செய்திகளை வெளியிட்டு உள்ளன.

1) வாஷிங்டன் போஸ்ட்: "மிகவும் பிரபலமான மோடி 23 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மாநில அல்லது தேசியத் தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெறத் தவறியதில்லை, அவர் வீழ்ந்ததே இல்லை. முந்தைய தேர்தல்களில் மகத்தான வெற்றிகளை அனுபவித்திருக்கிறார். ஆனால், தற்போது மோடி அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிகிறது. ஆரம்பகால வாக்கு எண்ணிக்கைகள் அவரது இந்து தேசியவாதக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை காட்டுகிறது. பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய மோடியை சுற்றி இருந்த அந்த இரும்பு திரை விலகி இருக்கிறது. அவர் வீக்காகி விட்டார்.."

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

2) நியூயார்க் டைம்ஸ்: "நரேந்திர மோடியைச் சுற்றியிருந்த வெல்ல முடியாத கவசம் தகர்ந்துவிட்டது.... முக்கியமாக இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் அந்த கட்சி கடும் தேர்தல் பின்னடைவை சந்தித்து உள்ளது. இந்துத்துவா மண்ணில் பாஜக வீழ்ந்துவிட்டது. மோடியை வீழ்த்த முடியாது என்று பிம்பம் இருந்தது. அது தற்போது உடைந்துவிட்டது.

3) டான்: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மீடியா போர்டல், லோக்சபா தேர்தல் 2024 முடிவை "இந்திய வாக்கு எண்ணிக்கை மோடி கூட்டணி குறுகிய பெரும்பான்மையை வென்றதைக் காட்டுகிறது" என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டு உள்ளது. ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. கோவில் கட்டியும் பாஜகவை வாக்காளர்கள் தண்டித்தனர் . குறிப்பாக, காவி கட்சியின் மதிப்புமிக்க திட்டமான அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள தொகுதியான உத்தரபிரதேசத்தில் உள்ள பைசலாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றுள்ளது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

4) அல் ஜசீரா: "வலிமையான மோடியை அடக்கமாக மாற்றும் தேர்தல் முடிவு இது. இனி அவருக்கு நாடாளுமன்றத்தில் சவால்கள் வரும். நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் நிறைய இருக்கும், மேலும் அவர் செய்ய வேண்டிய பெரிய அளவிலான சமரசங்கள் இனிதான் வரும். அவர் கூட்டணி ஆட்சி வேண்டும். அது மிக கடினம் கடந்த காலத்தில், அவருக்கு மிருகத்தனமான பெரும்பான்மை இருந்தபோது, ​​அவர் சமரசம் செய்ய மாட்டார். சமரசம் செய்து கொள்ளாத வலிமையான ஒருவராக அவர் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். இனி அது முடியாது" என்று வெளியிட்டு உள்ளனர்.

5) பிபிசி: "சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிய வலிமையான, திறமையான தலைவர் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவரது அரசாங்கம் கூட்டாட்சி நிறுவனங்களை பலவீனப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி இருக்க பாஜக பெரும்பான்மை இழந்துள்ளது. கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. கருத்து வேறுபாடு மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கிய கட்சி வீழ்ந்து உள்ளது. இந்தியாவின் சிறுபான்மை முஸ்லிம்கள் அவரது ஆட்சியின் கீழ் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். தற்போது அவரின் ஆட்சிக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது"

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+