விஜய்க்கு திடீரென போன் போட்ட பிரதமர் மோடி! முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்து!
சென்னை: பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்த நிலையில், தொலைபேசி வாயிலாக விஜய்யிடம் பேசி வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, முதல்வராக பதவியேற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்க்கு பிரதமர் மோடி மட்டுமின்றி பல்வேறு மாநில முதல்வர்களும் வாழ்த்தும் பாராட்டும் கூறியுள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்த நிலையில், தொலைபேசி வாயிலாக விஜய்யிடம் பேசி வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, முதல்வராக பதவியேற்றுக்கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் விஜய்க்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" என்று பதிவிட்டு இருந்தார்.
மோடியின் இந்த பதிவுக்கு முதல் அமைச்சர் விஜய்யும் தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார். விஜய் வெளியிட்ட பதிவில், "முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த அவருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, மத்திய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம" என்று பதிவிட்டு இருந்தார்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications