டைட் செக்யூரிட்டி.. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி! மொத்த சிட்டியையும் கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரும் நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் 15000 போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும், சென்னை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பிரதமரின் வருகிற 11.10.2026 அன்று சென்னை வருகையையொட்டி, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள். துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுடன் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Narendra Modi Chennai Police Security

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை காவலர்கள், கமாண்டோ பிரிவு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் விரிவான 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வருகை தரும் சென்னை விமான நிலையம், போரூர் பைபாஸ் மெட்ரோ இரயில் நிலையம், கோட்டூர்புரம் சென்னை ஐ.ஐ.டி. வளாகம், நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகம், கிண்டி மக்கள் பவன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் முக்கிய வழித்தடங்களிலும், விரிவான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பிற விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், சென்னையிலுள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள இரயில் நிலையங்கள், மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்." என கூறப்பட்டுள்ளது.

நாளை (அக்டோபர் 11ஆம் தேதி) டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் காலை 11:30 மணிக்கு பூந்தமல்லி செல்கிறார். அங்கு சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலைய ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்., முதல்வர் விஜய்யுடன் போரூர் வரை பயணம் செய்கிறார். தொடர்ந்து சென்னை ஐஐடி நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

இதற்கிடையே பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் முக்கிய நிகழ்வு ஒன்றும் நடைபெற இருக்கிறது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் அமைக்க, சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இளையராஜாவின் இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+