வந்தாச்சு தாம்பரம்-செங்கோட்டை அதிவேக ரயில்.. ஸ்பெஷல் என்ன? டாப் தகவல்கள்
சென்னை: பிரதமர் மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் தாம்பரம் - செங்கோட்டை இடையேயான புதிய விரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த ரயிலின் கட்டணம் எவ்வளவு என்பதையும், எங்கெல்லாம் இந்த ரயில் நின்று செல்லும் என்ற விவரங்களை பார்ப்போம்.
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த வகையில் தாம்பரம் - செங்கோட்டை இடையேயான புதிய விரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் கட்டணம் எவ்வளவு மற்றும் எங்கெல்லாம் இந்த ரயில் நின்று செல்லும் என்ற விவரங்களை பார்ப்போம்.

* திருவாரூர், காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது.
*அம்பை-பாவூர்சத்திரம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுவது தென்காசி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
*தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு இந்த ரயில் புறப்படும். நெல்லைக்கு மறுநாள் காலை 7.25 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கும் சென்றடையும்.
* ஏப்ரல், மே மாதங்களில் வாரம் ஒரு முறை ரயிலாகவும், பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

* விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.
* தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சாதாரண படுக்கை டிக்கெட்டின் விலை ரூ. 405 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு ஏசி ரூ. 985 எனவும், 2-ம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ. 1,505-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சாதரண படுக்கை டிக்கெட் கட்டணம் ரூ. 435, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி கட்டணம் ரூ. 1060, இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1620-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications