மோடி சொன்ன ஒரு வார்த்தை.. திடீரென ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி வைத்த ஒரு கோரிக்கைதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

PM Modi had asked Governor Tamilisai to contest this Loksabha election Reason behind her resignation

தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை 2 - 3 நாட்களில் பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அங்கே கனிமொழி 563,143 வாக்குகள் பெற்று வென்றார். அதே சமயம் தமிழிசை 215,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில்தான் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தூத்துக்குடி அல்லது தென் சென்னை அல்லது நெல்லை அல்லது புதுச்சேரியில் இருந்து பாஜக வேட்பாளராக இவர் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கன்னியாகுமரியில் போட்டியிடவும் தமிழிசைக்கு எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கே பொன் ராதாகிருஷ்ணன், விஜயதரணி ஆகியோர் உள்ளதால் எங்கே களமிறங்குவார் என்ற சந்தேகம் உள்ளது.

மோடி வைத்த கோரிக்கை: பிரதமர் மோடி வைத்த ஒரு கோரிக்கைதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு ஆளுநர் தமிழிசையிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாகவும், மோடியின் வேண்டுகோளின் பேரில் அவர் ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்தது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

இரண்டாம் கட்ட லிஸ்ட்; இது போக 2024 மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மார்ச் 13 அன்று வெளியிட்டது. அனுராக் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பசவராஜ் பொம்மை, பியூஷ் கோயல், அனில் பலுனி உள்ளிட்ட 72 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில்தான் விரைவில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை 2 - 3 நாட்களில் பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+