பிரதமர் மோடியின் நண்பர் ஜி.கே.வாசன்.. சொன்ன அண்ணாமலை.. டக் என்று திருத்திய ஜி.கே. வாசன்
சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நண்பர் ஜி.கே. வாசன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கு வாசன் நண்பர் என்று சொல்வதை விட நலம் விரும்பி என்று சொல்லுங்கள் என்று திருத்தினார் ஜி.கே. வாசன்.
பாஜக கூட்டணியில் தமாகா இணைந்ததை அடுத்து, அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்திய பிறகு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்கப் போகிறார். பாஜக கூட்டணியில் முதல் ஆளாக வந்திருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். ஜி.கே.வாசனிடம் நான் எப்போதும் அரசியல் ஆலோசனைகள் பெறுவது உண்டு. அந்த வகையில், அடுத்த 100 நாட்களில் ஜி.கே.வாசனின் ஆதரவுடன் வளமான கூட்டணியைத் தமிழ்நாட்டில் உருவாக்குவோம்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நண்பராக இருப்பவர் ஜி.கே. வாசன். பிரதமருக்கு நேரடியாக போன் செய்து பேசக்கூடியவர் என்று சொன்னார் அண்ணாமலை. அதற்கு ஜி.கே. வாசன், பிரதமரின் நண்பர் என்று சொல்வதை விட நலம் விரும்பி என்று சொல்லலாம் என்று கூறி திருத்தினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து, அண்ணன், தம்பிகளாக, ஜாதி, மதம் கடந்து மோடி அவர்களை மீண்டும் பாரதப் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகப் பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications