Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi தமிழகம் வருகை LIVE: தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் எதிரி திமுக அரசு - மதுராந்தகத்தில் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியை CMC ஆட்சி என்று கூறுகிறார்கள். அதாவது ஊழல், மாஃபியா, குற்றங்களை (corruption, mafia, crime) ஆதரிக்கும் அரசு. இந்த திமுக, ஊழல் அரசை வேரோடு கிள்ளி ஏறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாட்டை மாற்றியமைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. தமிழ்நாட்டுக்கு இரட்டை என்ஜின் ஆட்சி அவசியமாகும். தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் எதிரி திமுக அரசு என்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

PM Modi  Tamil Nadu  Chennai                                                            Other Tags

Mar 05, 2026, 10:35 am IST

ஈரான் மோதல் காரணமாக அமெரிக்க ராணுவ கையிருப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே போகிறது. இதனால் ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Jan 23, 2026, 5:17 pm IST

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி முடித்தார். மேடையில் உள்ள தலைவர்களை சந்தித்து வணக்கம் செலுத்திப் பேசினார்.
Jan 23, 2026, 5:17 pm IST

தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் எதிரி திமுக. தமிழகத்தை வளர்ச்சியை நோக்கி நகர்த்த மாற்றம் தேவை - பிரதமர் மோடி
Jan 23, 2026, 5:15 pm IST

தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது திமுக. தன் வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றம் சென்றது திமுக. ஜல்லிக்கட்டு, கார்த்திகை தீபத்திற்காக துணை நின்றோம். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை பிரச்சனையாக்கியது திமுக - பிரதமர் மோடி
Jan 23, 2026, 5:11 pm IST

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் குற்றங்கள் கட்டுக்குள் இருந்தன. சிறப்பாக செயல்பட்டவர் அவர். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன் என்று காசி தமிழ்ச் சங்க நிகழ்வை சுட்டிக்காட்டி பேசினார் பிரதமர் மோடி.
Jan 23, 2026, 5:08 pm IST

தமிழக இளைஞர்களை போதை கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக அரசு. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்டது தேஜ கூட்டணி - பிரதமர் மோடி
Jan 23, 2026, 5:06 pm IST

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க இரட்டை என்ஜின் ஆட்சி தேவை. முதலீட்டாளர்களின் விருப்பமாக இந்தியா உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் அரசு இங்கு தேவை - பிரதமர் மோடி
Jan 23, 2026, 5:03 pm IST

தமிழ்நாட்டை மாற்றியமைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. தமிழ்நாட்டுக்கு இரட்டை என்ஜின் ஆட்சி அவசியமாகும் - பிரதமர் மோடி
Jan 23, 2026, 5:00 pm IST

கண் முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம் - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:58 pm IST

தேஜ கூட்டணியில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறோம். தமிழ்நாடு வளர்ச்சியில் இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியப் பங்குள்ளது - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:58 pm IST

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 7 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் அரசை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களும், விவசாயிகளுமே தமிழகத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்திற்கு 11 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சியைக் கொடுத்தது பாஜக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. மீனவர்களுக்கும் விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:57 pm IST

தமிழக வளர்ச்சிக்கான பெரும் நிதியை மத்திய அரசு வழங்கியது. இந்தியாவுக்கு பண்பாட்டு பெருமை சேர்த்தது தமிழ்நாடு. 11 ஆண்டுகளில் மும்மடங்கு நிதியை தந்தோம் - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:57 pm IST

தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டது. இங்கு ஊழல் மலிந்துள்ளது குழந்தைக்குக்கூட தெரியும். தமிழ்நாடு அரசு பெண்களை, கலாசாரத்தை வசைபாடுகிறது. திமுகவின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்.
Jan 23, 2026, 4:57 pm IST

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்திற்காக இயங்கி வருகிறது. இங்கு ஜனநாயகம் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டது - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:47 pm IST

திமுக அரசை மக்கள் சிஎம்சி அதாவது கிரிமினல், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர் - பிரதமர் மோடி பேச்சு
Jan 23, 2026, 4:46 pm IST

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. திமுக அரசு முடிவின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. ஊழல் மாபியா, கிரிமினல் ஆதரவு அரசு இது. ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு காக்கவில்லை - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:40 pm IST

தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். அப்போது, பொதுக்கூட்டத்தில் ஓவியம் ஒன்றை வைத்திருந்த சிறுமியிடம் இருந்து அந்த ஓவியத்தை பிரதமர் மோடி வாங்கி வரச்சொன்னார்.
Jan 23, 2026, 4:38 pm IST

மக்கள் வெள்ளம்போல இங்கு கூடியுள்ளனர். தேஜ கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிவிட்டது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடக்கம். மேடையில் உள்ள தலைவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:35 pm IST

ஏரி காத்த ராமனின் திருவடிகளை வணங்குகிறேன். எம்ஜிஆர் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினோம். போராடிய வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். இந்திய விடுதலைக்காக நேதாஜியுடன் பலர் போராடினர். தமிழர்களின் நாடி நரம்புகளில் வீரம், நாட்டுப்பற்றுள்ளது. ஆட்சி மாற்றத்துக்கு தமிழகம் தயாராகிவிட்டது - பிரதமர் மோடி பேச்சு
Jan 23, 2026, 4:31 pm IST

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். 2026 இல் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்குப் பின் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர் - பிரதமர் மோடி
Jan 23, 2026, 4:29 pm IST

வணக்கம் கூறி உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
Jan 23, 2026, 4:29 pm IST

பாரத் மாதா கீ ஜே - உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
Jan 23, 2026, 4:24 pm IST

தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தந்தவர் மோடி - எடப்பாடி பழனிசாமி
Jan 23, 2026, 4:24 pm IST

குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆள வேண்டுமா. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் திமுகவுக்கு இறுதித் தேர்தல். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று மதுராந்தகம் கூட்டத்தில் பழனிசாமி பேச்சு.
Jan 23, 2026, 4:20 pm IST

மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா. மக்கள் விரோத ஆட்சி தேவையா என எடப்பாடி பழனிசாமி கேட்டதும் இல்லை இல்லை என கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான் - பழனிசாமி பேச்சு
Jan 23, 2026, 4:18 pm IST

அண்ணாமலை பெயரை எடப்பாடி பழனிசாமி உச்சரித்ததும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
Jan 23, 2026, 4:16 pm IST

மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது மதுராந்தகம். சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சான்று என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
Jan 23, 2026, 4:16 pm IST

பிரதமர் மோடி இந்த மண்ணிலே கால் வைத்தவுடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. மதுராந்தகமே குலுங்கும் அளவு மக்கள் வெள்ளம் - எடப்பாடி பழனிசாமி.
Jan 23, 2026, 4:15 pm IST

மோடி பங்கேற்றுள்ள மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
Jan 23, 2026, 4:14 pm IST

முதல்வர் ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய். கொடுத்த வாக்குறுதிகளில் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பெயிலான கட்சி. திமுக ஆட்சி மறுபடி ஆட்சிக்கு வரலாமா. திமுக அரசு 100க்கு 13 மதிப்பெண் பெற்றுள்ளது. தோல்வியுள்ள அரசு திமுக அரசு - அன்புமணி
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+