நம்பினால் நம்புங்கள்.. டிரைவரே இல்லாமல் ஓடும் ரயில்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. டெல்லியில்!
டிரைவரே இல்லாத மெட்ரோ ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
சென்னை: இந்தியாவில் டிரைவரே இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயிலை தலைநகர் டெல்லியில்
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.. இதுபோலவே பெங்களூருவிலும் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயங்க போவதாக கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில்களுக்கான பொது விதிகளில் மத்திய அரசு ஏராளமான மாற்றங்கள் செய்துள்ளது... அதில் ஒன்றுதான் டிரைவர் இல்லாமல் ரயில்களை இயக்குவது என்பது.
சிபிடிசி என்ற சிக்னலிங் சிஸ்டம் மூலம் கொச்சி, நாக்பூரில் புதிய மெட்ரோ சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன... ஆனால் இதுபோன்ற டிரைவர் இல்லாமல் ரயில் ஓடுவது என்பது இதுவரை கிடையாது. சென்னை: இந்தியாவில் டிரைவரே இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயிலை தலைநகர் டெல்லியில்
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.. இதுபோலவே பெங்களூருவிலும் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயங்க போவதாக கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில்களுக்கான பொது விதிகளில் மத்திய அரசு ஏராளமான மாற்றங்கள் செய்துள்ளது... அதில் ஒன்றுதான் டிரைவர் இல்லாமல் ரயில்களை இயக்குவது என்பது.
சிபிடிசி என்ற சிக்னலிங் சிஸ்டம் மூலம் கொச்சி, நாக்பூரில் புதிய மெட்ரோ சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன... ஆனால் இதுபோன்ற டிரைவர் இல்லாமல் ரயில் ஓடுவது என்பது இதுவரை கிடையாது.

சிக்னல்
இதுதொடர்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகள் சொல்லும்போது, சிபிடிசி (CBTC) எனப்படும் தகவல்தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு சிக்னல் சிஸ்டத்தின் கீழ், டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன... இது பெங்களூரு மெட்ரோவில் முதல் முறை பயன்படுத்தப்பட இருக்கிறது..

கையெழுத்து
இதனை மஞ்சள் லைனில் அமல்படுத்த சியமின்ஸ் (Siemens) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.. மஞ்சள் லைனில் ஆர்வி ரோடு - பொம்மசந்திரா இடையிலான 19 கிமீ. நீட்டிக்கப்பட்ட வழித்தடம் வரும் நவம்பர் 2021ல் முடிக்க திட்டமிடப்பட்டது... ஆனால் கொரோனா பிரச்சனை வந்துவிடவும், இந்த பணிகள் மார்ச் 2022ல் தான் முழுமையடைந்து, அதன்பிறகு பயன்பாட்டிற்கு வரும்.. 10 வருடங்களுக்கு பிறகு பர்ப்பிள், கிரீன் லைன்களில் சிக்னலிங் சிஸ்டத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

மெட்ரோ ரயில்
பெங்களூரு மெட்ரோவில் ஜிஓஏ2 (GOA2) தரத்திலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. அதனால், ஒரு ஸ்டேஷனில் இருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு மெட்ரோ ரயில் தானாகவே இயங்கும்... ரயில் கதவுகளை திறக்க, மூட டிரைவர்கள் தேவை.. அதேபோல வழியில் ஏதாவது பிரச்சினை என்றாலோ அல்லது வழித்தடத்தை தேர்வு செய்யவேண்டும் என்றாலோ டிரைவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது... ஆனால் ஜிஓஏ (GOA4) தொழில்நுட்பத்தில் முழுவதும் எல்லாமே ஆட்டோமெட்டிக்தான்" என்கின்றனர்.

டெல்லி
இந்த முறையைதான் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.. 37 கிமீ தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமான இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரஸ் மூலம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர், "ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை நோக்கி இந்தியா எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை இந்த விழா காட்டுகிறது என்று பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.

பயண அட்டை
மேலும், அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் அறிமுகப்படுத்தினார்... இந்த அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்... டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ் பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications