என்ன மோடி சாடிஸ்டா?.. ஸ்டாலின்தான் சாடஸ்ட்.. தமிழிசை கிண்டல்!

பிரதமர் மோடியை ’சாடிஸ்ட்’ என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ என அழைக்கப்படுவார் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியை 'சாடிஸ்ட்' என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் 'சாடஸ்ட்' என அழைக்கப்படுவார் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''மோடி ஒரு சாடிஸ்ட்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் இந்த பேச்சு இந்தியா முழுக்க வைரலானது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசினார். இந்த ஆலோசனையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பேட்டி

பேட்டி

அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. திமுகாவா, பாஜகவா என்று இனி பார்க்கலாம். நீங்களா, நாங்களா என பார்ப்போம். இனி அவர்களுடன்தான் எங்கள் போட்டி.

கஜா புயல்

கஜா புயல்

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை என திமுக தலைவர் கூறுவது தவறு. ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். சிறுபான்மை மக்களை பாஜக மதிக்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை. பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுவது சுத்த பொய்.

தமிழகம் மீது அக்கறை

தமிழகம் மீது அக்கறை

தமிழகம் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகத்தை பற்றி என்னிடம் அவர் அடிக்கடி விசாரித்தார். மோடி போன்ற நல்லவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது தேர்தலிலும் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் செல்லுபடியாகாது.

மோடி சாடிஸ்ட்

மோடி சாடிஸ்ட்

பிரதமர் மோடியை 'சாடிஸ்ட்' என கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடி சாடிஸ்ட் கிடையாது. மோடியை அப்படி கூறும் ஸ்டாலின் இனிமேல் 'சாடஸ்ட்' என அழைக்கப்படுவார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+