இப்போதும் சொல்கிறேன்.. மோடி சாடிஸ்ட்தான்.. தமிழிசைக்கு ஸ்டாலின் பதிலடி!
இப்போதும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட்தான் என்று விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: இப்போதும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட்தான் என்று விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
அதேபோல் ''மோடி ஒரு சாடிஸ்ட்'' என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த பேச்சு அவரது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சாக பார்க்கப்படுகிறது.

பதில்
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார். அதில், பிரதமர் மோடியை 'சாடிஸ்ட்' என கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடி சாடிஸ்ட் கிடையாது. மோடியை அப்படி கூறும் ஸ்டாலின் இனிமேல் 'சாடஸ்ட்' என அழைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

மோடி சாடிஸ்ட்தான்
இந்த நிலையில் தமிழிசையின் இந்த கருத்திற்கு தற்போது ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தான் முன்மொழிந்ததை யாரும் தவறு என்று கூறவில்லை. இதை யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. கூட்டணியில் இதனால் குழப்பம் இல்லை.

கஜா புயல்
இப்போதும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட்தான். மோடி இதுவரை கஜா சேதத்தை வந்து பார்வையிடவில்லை. இதுவே குஜராத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி சென்று பார்த்திருப்பார். தமிழகத்திற்கு ஒரு பிரச்சனையை என்றதும் அவர் இந்த பக்கம் கூட வரவில்லை. கஜா புயலுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை.

நீதிமன்றம் கண்டனம்
இதற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்து இருக்கிறது. எப்போது கஜா புயல் வழங்கப்படும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசு அந்த வேகத்தில்தான் செயல்படுகிறது, என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக திமுக இடையே வார்த்தை போர் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications