மோடிதான் சூப்பர் ஸ்டார்.. பட்டத்தை அவரவரே கொடுத்துக்கொள்ளக்கூடாது.. சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்
சென்னை: "சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர்களே கொடுத்துக் கொள்ள கூடாது. சிறந்த தலைவர் என பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் பட்டமளிப்பதால் அவர்தான் சூப்பர் ஸ்டார்" என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் பேசிய சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள்.

ஏன் தெரியுமா? காரணம், ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அரசியலில் நான் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துவிட்டார்கள்" என பேசியிருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், "சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அவரவர்களே கொடுத்துக் கொள்ளக் கூடாது. சிறந்த தலைவர் என பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் பட்டம் அளிப்பதால் மோடி தான் சூப்பர் ஸ்டார்" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என தமிழக முதல்வர் திட்டவட்டமாக நேற்று தெரிவித்தார். இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது எனத் தெரிவித்தார்.
இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "கைவினைக் கலைஞர்களின் வாழ்வை முடக்கப் பார்க்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். விஸ்வகர்மா திட்டத்தால் சமூகநீதி பாதிக்கப்படும் எனக் கூறி கைவினைக் கலைஞர்களின் வாழ்வை முடக்குவதற்கு நடத்தப்படும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. காவி என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமான நிறம் அல்ல; அது நாட்டின் பாரம்பரியம். விஸ்வகர்மா திட்டம் குறித்து திமுக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications