தஞ்சை மணிமாறனை புகழ்ந்த பிரதமர் மோடி.. ஞான பாரதம் இயக்கம் உருவாக காரணமே இவர்தானாம்! யார் இவர்?
டெல்லி: "ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச் செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சை மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது" என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தமிழ் ஓலைச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் கற்பித்து வரும் தஞ்சை மணிமாறனின் உத்வேகத்தால் உதித்ததுதான் 'ஞான பாரத இயக்கம்' திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் உரை
மனதின் குரல் (Mann ki baat) நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி இன்று பேசுகையில், "பாரதத்தின் கலாச்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரம், நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும் தான். ஆனால் நமது கலாச்சாரத்தின் உயிர்ப்புத்தன்மையுடைய மேலும் ஒரு பக்கம் இருக்கிறது. நமது நிகழ்காலம் மற்றும் நமது வரலாற்றை நாம் ஆவணப்படுத்திக்க் கொண்டே வரவேண்டும் என்பதுதான் அந்தப் பக்கம்.
பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும். இந்த ஓலைச்சுவடிகளிலே விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் இருக்கின்றன, இசை இருக்கிறது, தத்துவம் உள்ளது, அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித சமூகத்தின் எதிர்காலத்தை எப்படி ஒளிமயமானதாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றிய சிந்தனைதான் அது.
தஞ்சை மணிமாறன்
இப்படிப்பட்ட அசாதாரணமான ஞானத்தை, இந்த மரபினைப் போற்றிப் பாதுகாப்பதுதான் நமது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது தேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களுடைய சாதனையாகவே ஆக்கியவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன்.
இன்றைய தலைமுறையினர் தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினரின் காலத்தில் இந்த விலைமதிப்பில்லாத மரபுச் செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று மணிமாறன் கருதினார். ஆகையால் அவர் மாலைநேர வகுப்புகளைத் தொடங்கினார். அதிலே மாணவர்கள், வேலைபார்க்கும் இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலர் அங்கே கற்கத் தொடங்கினார்கள்.
தமிழ் ஓலைச்சுவடி
மணிமாறன் தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் பற்றிக் கற்பித்தார். இன்று பல முயற்சிகளுக்குப் பிறகு பல மாணவர்கள் இந்த வழிமுறையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள். சில மாணவர்கள், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவமுறை மீதான ஆய்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றால், நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் அடைந்து கிடக்காமல், புதிய தலைமுறையினருக்கு விழிப்பேற்படுத்தும் பணியை ஆற்றும் இல்லையா?
ஞான பாரத இயக்கம்
இந்த எண்ணத்தால் உத்வேகம் அடைந்து, இந்திய அரசு, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில், 'ஞான பாரத இயக்கம்' என்ற ஒரு வரலாற்று முன்னெடுப்பை அறிவித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். பிறகு ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலுமிருந்தும் மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பாரதத்தின் ஞானப் பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
நீங்களும் இப்படிப்பட்ட முயற்சியோடு இணைந்திருந்தாலோ, இணைய விரும்பினாலோ, மைகவ் அல்லது கலாச்சார அமைச்சகத்தைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள்; ஏனென்றால் இவை சுவடிகள் மட்டுமல்ல, இவை இனிவரும் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதத்தின் ஆன்மாவின் அத்தியாயங்கள்" எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
யார் இந்த தஞ்சை மணிமாறன்?
தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலகத்தில் தமிழ் பண்டிதராக இருக்கிறார் மணிமாறன். இவருக்கு வயது 55. இவர் தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைறயில், திருக்கோவில்கள் மறுசீரமைப்பு குழு, மாநில சுவடிகள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்ப் பல்கலைகழக சுவடியில் துறை பாடத்திட்டக்குழு, யுனெஸ்கோ அமைப்பில் திருக்குறள் அங்கீகாரம் பெறுவதற்கான குழு போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.
மேலும், சரஸ்வதி மஹால் நுாலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை திரட்டி, 20 நுால்களை வெளியிட்டுள்ளார். சரஸ்வதி மஹால் நுாலக பருவ இதழ்களில் ஐந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், பிற வெளியீடுகளில் 13 நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழ் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓலைச்சுவடி படிப்பதற்கான பயற்சியை அளித்துள்ளார். ஏடகம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, இலவசமாக பலருக்கு சுவடிகள் படிப்பதற்கான பயிற்சிகள் அளித்து வருகிறார். ஏடகத்தில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார்.
-
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன











Click it and Unblock the Notifications