மோடியால் இதைத்தான் மாற்ற முடிந்துள்ளது.. பாஜகவை மிரட்டும் ‘இந்தியா’.. முதல்வர் மு.க ஸ்டாலின் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி அவர்களால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு "இந்தியா" என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. அவர்கள் தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்ததில் இருந்தே ஆளும் பாஜக தரப்பு 'பாரத்' என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

PM Modi only manage to change the name of India after 9 years TN Chief Minister Stalin slams

இந்த நிலையில், தான், இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அச்சடிக்கப்பட்டு இருக்கும் அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். இந்த ஜி 20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் தான் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் பல மத்திய அரசை விமர்சனம் செய்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

PM Modi only manage to change the name of India after 9 years TN Chief Minister Stalin slams

பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+