Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்கட்டணங்களை உயர்த்தி கோவை நெசவாளர்களை நசுக்கும் திமுக.. நீலகிரியில் பிரதமர் மோடி ‛அட்டாக்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார். இதையடுத்து 2வது நாளாக இன்று பிரதமர் மோடி வேலூர், நீலகிரி தொகுதிகளில் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். நீலகிரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மின்கட்டணத்தை உயர்த்தி கோவை நெசவாளர்களை திமுக நசுக்கி வருகிறது என குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 19 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், மத்திய இணையமைச்சர் நீலகிரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

PM Modi rally to be held today in Vellore and Nilgiris constituency after his Chennai road show

அதேபோல் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி, புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகத்துக்கு வேலூர் தொகுதி, ஜான்பாண்டியனின் தமமுகக்கு தென்காசி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தருக்கு பெரம்பலூர், இமகமுக தலைவர் தேவநாதன் யாதவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 6 முறை வந்து சென்ற நிலையில் இப்போது 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.

நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்று ரோடு ஷோ நடத்தி அங்குள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார். பாஜகவின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார்.

அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கி ஓய்வெடுத்தார். இதையடுத்து இன்று காலையில் பிரதம் மோடி தமிழகத்தில் 2 நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி காலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வேலூர் சென்றார். தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி வேட்பாளர் கணேஷ் குமார், கிருஷ்ணகிரி வேட்பாளர் கேஎஸ் நரசிம்மன் உள்ளிட்டவர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

இந்த வேளையில் காங்கிரஸ் மற்றும் திமுகவை கடுமையாக அவர் விமர்சனம் செய்தார். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பெண்களை அவமானப்படுத்துகிறது. ஜெயலலிதாவை எப்படி நடத்தினார்கள் என்பது தெரியும். கச்சத்தீவை காங்கிரஸ், திமுக தான் இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டு இப்போது கண்ணீர் வடிக்கின்றனர் என காட்டமாக தெரிவித்தார். மேலும் வரும் லோக்சபா தேர்தலி்ல தமிழகத்தில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினருக்கு ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

அதன்பிறகு வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை கிளம்பிய பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து மதியம் மேட்டுபாளையம் வந்தார்.

பிரதமர் மோடிக்கு நிர்வாகிகள் தாமரை மலர் உருவாக்கப்பட்ட மாலை அணிவித்தனர். அதன்பிறகு நீலகிரி - மத்திய அமைச்சர் எல் முருகன், கோவை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூர் - பாஜக வேட்பாளர் முருகானந்தம், பொள்ளாச்சி - வசந்தராஜன், ஈரோடு தமாக வேட்பாளர் விஜயகுமார் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், ‛‛காங்கிரஸ், திமுக வாரிசு அரசியல் செய்கிறது. தனது மகன், மகள்களை மட்டுமே உயர் பதவிக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக்கி உள்ளது. அதற்கு கூட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

கோவையில் ஜவுளி தொழில் நன்றாக உள்ளது. ஆனால் திமுக அரசு மின்கட்டணங்களை உயர்த்தி நெசவாளர்களை நசுக்கி வருகிறது. அவர்கள் செய்யும் ஊழல்களில் வரும் இழப்புகளை மக்கள் மத்தியில் திணிக்கிறார்கள். இன்று நம்நாடு மேக் இன் இந்தியா நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நடவடிக்கையை முடக்கி நினைக்கிறது திமுக அரசு. ஏனென்றால் அப்படியான நபர்களிடம் தான் திமுக நட்பு பாராட்டுகிறது.

திமுக சொந்த லாபத்துக்காக தமிழகத்துக்கு அதிக கேடுகளை விளைவித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக அரசு தான் கோவையில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கி உள்ளோம். இதனால் அதிக லாபம் கிடைக்கும். இதனை ‛இந்தியா' கூட்டணி செய்திருப்பார்களோ என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்'' என தெரிவித்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை சென்றார். அதன்பிறகு விமானத்தில் மகாராஷ்டிரா புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி இன்று வேலூர் மற்றும் நீலகிரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்த 2 தொகுதிகளுக்கு திமுக மிகவும் முக்கிய தொகுதிகளாகும். நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சரும், சிட்டிங் எம்பியுமான ஆ ராசா போட்டியிடுகிறார். அதேபோல் வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகனும், சிட்டிங் எம்பியுமான கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+