தமிழை தூக்கி பிடிக்கும் மோடி.. ஐநா தொடங்கி சீனா வரை.. தமிழகம் மீது பாஜக தீவிர கவனம்.. ஏன்?

தமிழ் தொடர்பாக தீவிரமாக கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Modi Praises Tamilnadu | ஐநா தொடங்கி சீனா வரை.. தமிழகம் மீது பாஜக தீவிர கவனம்..ஏன்?-வீடியோ

    சென்னை: கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழ் தொடர்பாக தீவிரமாக கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். இதற்காக தமிழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இன்று மதியம் சென்னை வரும் அவர், மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

    பிரதமர் மோடியுடன் மூன்று நாட்கள் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.இதில் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தற்போது தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் கிண்டி வந்தார். தற்போது ஹெலிகாப்டரில் அவர் மாமல்லபுரம் சென்றுள்ளார்.

    தமிழ்நாடு எப்படி

    இது தொடர்பாக மோடி செய்துள்ள டிவிட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.

    என்ன டிவிட்

    இன்னொரு டிவிட்டில், சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் எப்படி

    தமிழ் எப்படி

    தமிழ் தொடர்பாக தீவிரமாக கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி ஐநாவில் தமிழில் பேசினார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் தமிழில்தான் அவர் தனது உரையை தொடங்கினார்.

    மீண்டும்

    மீண்டும்

    எந்த பிரதமரும் இதுவரை கூறாத வகையில் தமிழ் மொழிதான் உலகின் பழமையான மொழி என்றும் பிரதமர் மோடி கூறி வருகிறார். தற்போது மீண்டும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு அவர் தமிழில் டிவிட் செய்துள்ளார். அவரின் இந்த டிவிட் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

    தேர்தல்

    தேர்தல்

    தமிழக மக்கள் தமிழ் மீது கடுமையான பற்று கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை கவர வேண்டும் என்பதற்காக மோடி இப்படி செய்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் வட இந்திய அரசியல் வேலைக்கு ஆகாது என்பதால் மொழி அரசியலை பாஜக கையில் எடுக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    சீனா எப்படி

    அது மட்டுமின்றி சீன மக்களுக்கு புரிய வேண்டும் என்றும் சீன மொழியிலும் இவர் டிவிட் செய்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க ஆவலாக இருக்கிறேன், அவரை இந்தியா அழைக்க ஆவலாக இருக்கிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+