பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு.. ஒரே காரில் பயணம்.. மொத்தமாக திரும்பிய மேற்கின் பார்வை!

Subscribe to Oneindia Tamil

பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார். இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் சென்றார். உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான, 'Oliy Darajali Dustlik' (உன்னத நட்புக்கான விருது) விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவித்தார் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்.

Narendra modi

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில், நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமர் மோடி இரண்டு நாள் உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கிர்கிஸ்தான் சென்றடைந்தார். அவரை மனாஸ் சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டின் அமைச்சரவையின் தலைவர் அடில்பெக் கஸிமலியேவ் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தானில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பாரம்பரிய நடனங்களை ஆடியும், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிஷ்கெக் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு மக்களுடன் கலந்துரையாடினார். இந்திய கலாச்சாரப் பிணைப்புகள் குறித்தும் உரையாடினார்.

அதைத்தொடர்ந்து, பிஷ்கெக் நகருக்கு வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார். பிரதமர் மோடியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றார் ரஷ்ய அதிபர் புதின். அதனைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், ரஷ்யா இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாவாசிகள் பரிமாற்றம் கடந்த ஆண்டு 16% அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிஷ்கெக்கில் நடைபெறும் சர்வதேச நாமாட் (Nomad) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் இணைந்து பயணித்தனர்.

முன்னதாக, அர்மீனியா பிரதமர், ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. ஈரான் அதிபர் உடனான சந்திப்பின் போது, ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கடல் மாலுமிகள் தாக்குதல் குறித்த இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

நாளை (செப்டம்பர் 1) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இந்த உச்சி மாநாட்டின் போது, பிராந்திய ஸ்திரத்தன்மை, பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள், எல்லை தாண்டிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வது மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+