சென்னையில் ஜொலிக்கும் “மோடி ஸ்டிக்கர்கள்” - செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் பாஜகவினர் செய்த காரியம்
சென்னை: நாளை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் சென்னையில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பேனர்களில் பாஜகவினர் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கின்றனர்.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு.

பிரதமர் மோடிக்கு அழைப்பு
இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 28 ஆம் தேதி சென்னை வர உள்ளார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் லட்சினையான "தம்பி" என பெயரிடப்பட்டு உள்ள குதிரை சிலையை வழங்கினர்.

மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு
இதேபோல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பில் பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மோடி ஸ்டிக்கர்
செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சென்னையில் வைக்கப்பட்டு இருக்கும் செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்பட ஸ்டிக்கர்களை பாஜகவினர் ஒட்டிச் சென்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications