மாணவர்களின் கலங்கரை விளக்கம்.. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு... பிரதமர், ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சென்னை: எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று பிரதமர் மோடி தனது ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச்செய்தியில் பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதி 'ஆசிரியர் தின விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இன்று செவ்வாய்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்துக்காக வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்
Teachers play a key role in building our future and inspiring dreams. On #TeachersDay, we salute them for their unwavering dedication and great impact. Tributes to Dr. S. Radhakrishnan on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) September 5, 2023
Here are highlights from the interaction with teachers yesterday… pic.twitter.com/F1Zmk4SSnf
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications