தஞ்சை.. நாச்சியார் கோவிலிலிருந்து 2 ஸ்பெஷல் பரிசு.. ஜின்பிங்கிற்கு மோடி கொடுக்கும் கிப்ட் இதுதான்!
தமிழகம் வந்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி இரண்டு முக்கிய பரிசுகளை வழங்க இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழகம் வந்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி இரண்டு முக்கிய பரிசுகளை வழங்க இருக்கிறார். இரண்டுமே தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த புகழ்பெற்ற பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பாதுகாப்பிற்கும் இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். இன்று மகாபலிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார்.
பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் இருந்து கார் மூலம் அவர் மகாபலிபுரம் சென்றார். இன்றும் அவர் முக்கிய ஆலோசனைகளை செய்ய இருக்கிறார்.

மோடி
இந்த நிலையில் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி, இன்று இரண்டு முக்கிய பரிசுகளை வழங்க இருக்கிறார். அதன்படி அன்னப்பறவை கொண்ட விளக்கு ஒன்றை பரிசளிக்க உள்ளார். இது வெண்கலத்தில் செய்த 6 அடி உயரம் கொண்ட பெரிய குத்து விளக்கு ஆகும்.

சிறப்பு
ஐந்து முகம் இருப்பது போல இந்த விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதன் எடை 108 கிராம். இதை சிறப்பாக தயாரித்துள்ளனர். இதை உருவாக்க 12 நாட்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது விளக்குகளுக்கு புகழ்பெற்ற நாச்சியார் கோவிலில் உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சை வரைபடம்
அதேபோல் மூன்று அடி உயரம் கொண்ட சரஸ்வதி வரைபடம் ஒன்றும் மோடி பரிசளிக்க உள்ளார். புகழ்பெற்ற தஞ்சாவூர் கிளாஸ் வரைபடம் ஆகும் இது. இதை பலகை படம் என்றும் அழைப்பார்கள். இதை உருவாக்க 45 நாட்கள் ஆகியுள்ளது. தஞ்சாவூர் கிளாஸ் வரைபடம் தற்போது உலகம் முழுக்க பிரபலம் ஆகும்.

சிறப்பு
மர பிரேம் வைத்து, சரஸ்வதி நடனம் ஆடும் கோலத்தில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியை உணர்த்த இந்த படம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் நல்லது தீயதை பிரித்து பார்க்க வேண்டும் என்பதற்காக அன்னப்பறவை சிலை உள்ள விளக்கு அளிக்கப்படுகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications