அண்ணாமலை, முருகனை அழைத்த மோடி.. கடைசி "ஆணி" அடிக்க முடிவு.. அதிரும் அதிமுக.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளாராம். இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் திட்டத்தில் மோடி உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று ஜனவரி 19ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

PM Modi to take important decision on AIADMK - BJP alliance on his travel from Rameshwaram

மோடி கோவில் : தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உதாரணமாக கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் 19ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனத்தில் வைத்து பிளான் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். அதன் பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடி சந்திப்பு: இந்த பயணத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளாராம். இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணி பற்றி முடிவு எடுக்கும். அதிமுக கூட்டணி முறிந்தாலும் திமுகவை தங்கள் பக்கம் இழுக்கலாம், இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை தங்கள் பக்கம் கொண்டு வரலாம்.

அப்படி செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் கால் வைக்கலாம் என்ற கணக்கை டெல்லி போட்டது. ஆனால் எத்தனை ரெய்டு நடந்தும், கைதுகள் நடந்தும் கூட திமுக - பாஜக இடையே உறவு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் அதிமுகவுடன் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்பதால்.. பாஜக இதில் தெளிவாக இருக்கிறதாம். பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாடு பயணத்திலேயே கூட்டணியை பற்றி இறுதி முடிவு எடுக்க போகிறார்களாம்.

கரும்பாக பிழிய போறாங்க: ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்னால்.. பிரச்சனை இல்லை. ஆனால் அதிமுக மட்டும் கூட்டணி வேண்டாம்.. நாங்கள் தனியாகவே போட்டியிடுகிறோம் என்று கூறினால்.. அதிமுகவை கரும்பாக பிழியும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

ரெய்டு இல்லாமல்.. அதிமுகவை இரண்டாக அல்லது பல பீஸாக பிரிக்கும் திட்டம் கூட டெல்லி வசம் உள்ளதாம். இரண்டு கட்சிகளில் ஒன்றை அழித்தால் தான் பாஜக வளரும்.. தென் மாவட்டங்களில் பாஜக வளர்ந்துவிட்டது. கூட்டணி வைத்தால் சிக்கல் இல்லை.. இல்லையென்றால் அதிமுகவிற்கு பெரிய செக் வைக்க மோடி திட்டமிட்டுள்ளாராம்.

அழைத்து பேசுவார்: இந்த பயணத்தில் மோடி அண்ணாமலை, எல் முருகன் ஆகியோரை அழைத்து பேசுவார். தொடக்கத்தில் கட்சி நிர்வாகிகள் சிலரையும் அழைத்து பொதுவாக குடும்ப விஷயங்கள், பர்சனல் விசாரிப்புகள் நடக்கும்.

அதன்பின் அவர்களை அனுப்பிவிட்டு அண்ணாமலை, எல் முருகன் ஆகியோரை மட்டும் வைத்து கூட்டணி பற்றிய முடிவை மோடி எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு இதில் புதிய தொடக்கம் கொடுக்கப்படும்.. அல்லது இறுதி ஆணி அடிக்கப்படும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+