ஸ்டாலின் பிறந்தநாள்.. பிரதமர் மோடி, நடிகர் விஜய், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

PM modi, Vijay and Annamalai extends birthday greetings to cm stalin

ஸ்டாலின் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சித் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார்.

மோடி வாழ்த்து: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து: முதல்வர் ஸ்டாலினின் 71ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வாழ்த்து: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+