பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி ரெடி... பிப்ரவரியில் மட்டும் தமிழகத்திற்கு ரெண்டு விசிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பிப்ரவரி 10 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக பாஜகவின் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பின்னடைவை சந்தித்த பாஜக, நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை நிரூபிக்க பணிகளை தொடங்கி விட்டது.

PM Modi visit To Tamilnadu on February 10 and 19 For Parliamentary Election Campaign

எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே, வரும் 27ம்தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகிறார். அன்று இரவு மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய பிப்ரவரி 10 மற்றும் 19 ம்தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருவதை பாஜகவினர் உறுதி செய்துள்ளனர். ஆனால் அவரது பிரச்சார பயண விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடியின் வருகையொட்டி தமிழக பாஜகவினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+