தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்.. 20ம் தேதி தொடங்கி வைக்கும் மோடி.. எந்த ரூட் தெரியுமா?
சென்னை: பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக 3 வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து பிரதமர் மோடி தேசிய ஜனநாய கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், பீகாரின் நிதிஷ் குமார், ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் மோடி பிரதமர் ஆக ஆதரவு அளித்து இருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர், சென்னை விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வரை பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ரயில், முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications