‛‛டார்க்கெட் 234’’.. தமிழக இளம் வாக்காளர்களை குறிவைத்த பிரதமர் மோடி.. ஜன.,25ல் பாஜக ‛‛மெகா பிளான்’’
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி வரும் 25ம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இருக்கும் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் பேச உள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கா தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்பிறகு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கி உள்ளன.

தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கி உள்ளன. தமிழகத்தை ஆளும் திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை உள்பட நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு குழக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் பாஜகவுடன் கூட்டணி இல்லை அதிமுக அறிவித்துள்ளது. பாஜக இன்றி அதிமுக தனது தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. அதேபோல் பாஜகவும் தனது தலைமையில் தமிழகத்தில் 3வது அணியை உருவாக்க திட்டம் வகுத்து வருகிறது. இதற்கான பணிகளை பாஜக தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 18 வயது முதல் 21 வயதுக்குள்ளான முதல் முறை வாக்காளர்கள் நல்ல ஆட்சி, நல்ல அரசியல், நல்ல ஆளுமை மிக்க தலைவர்களை எதிர்பார்க்கின்றனர்.
இதனால் வரும் ஜனவரி 25ம் தேதி தமிழக பாஜக சார்பில் 234 சட்டசபை தொகுதிகளில் ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக முதல் முறை ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்க இருக்கிறோம். பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழகத்தின் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் பேச உள்ளார்.
இது பாஜகவின் நிகழ்ச்சி அல்ல. தாமரையின் நிகழ்ச்சி அல்ல. நானும் அந்த நிகழ்ச்சியில் இருக்கமாட்டேன். பிரதமர் நல்ல ஆட்சி பற்றியும், நல்ல அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், 2024 தேர்தல் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் நேரடியாக பேச உள்ளார்'' என்றார்.












Click it and Unblock the Notifications