இவங்க இப்படி பேசுறாங்களா? அடுத்து பிரதமர் மோடி வந்து அப்படி பேசுவார் பாருங்க.. சு.வெங்கடேசன் கிண்டல்
சென்னை: நாடாளுமன்ற லோக்சபாவில் வெளிப்படையாக எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் விடுக்கிறார், அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் பேசினர். மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக்கொண்டிருக்கும்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் கோபமடைந்த மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என எச்சரித்தார். எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை மத்திய பாஜக அரசு ஏவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜக அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. 'இந்தியா' என கூட்டணிக்குப் பெயர் வைத்ததற்கு எதிராக பாஜக எம்.பிக்கள் ராஜ்யசபாவில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 நிகழ்வுகளையும் குறிப்பிட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். பாஜக மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டுகிறார், ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஐஎம் எம்.பி சு.வெங்கடேசன்.
“அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத்துறை உங்களது வீட்டுக்குவரும்” என்று மக்களவையிலும்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 4, 2023
“இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்” என்று மாநிலங்களவையிலும்
இந்த வாரம்
ஆளுங்கட்சியினர் பேசியுள்ளனர்.
அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார். pic.twitter.com/EPa0ILHFwO
சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " "அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத்துறை உங்களது வீட்டுக்குவரும்" என்று மக்களவையிலும் "இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்" என்று மாநிலங்களவையிலும் இந்த வாரம் ஆளுங்கட்சியினர் பேசியுள்ளனர். அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார்." என விமர்சித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications