சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான 2 நாட்கள் பேச்சுவார்த்தை இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் முறைசாரா மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார். புராதான சிற்பங்களைப் பார்வையிட்டு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
இன்று 2-ம் நாளாக இரு தலைவர்களும் கோவளத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சென்னையில் இருந்து நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு ஜின்பிங் புறப்பட்டுச் சென்றார்.
Oct 12, 2019, 2:07 pm IST
தமிழக சகோதர சகோதரிகளுக்கு நன்றி- மோடி ட்வீட்
சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும் பிரதமர் பாராட்டு
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.
சென்னையில் இயல்பு நிலைக்குத் திரும்பியது போக்குவரத்து
Oct 12, 2019, 2:04 pm IST
பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இருவரும் 8 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்- விஜய் கோகலே
ஜின்பிங் சென்னையில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு புறப்பட்டார்- தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்
Chennai: Chinese President Xi Jinping departs for Nepal; he was on a 2-day visit to India for the second informal summit with PM Narendra Modi in Mahabalipuram. #TamilNadupic.twitter.com/0o0cEZ4QAY
சீனா அதிபர் ஜின்பிங்கை வழியனுப்ப ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் விமான நிலையம் வருகை
Oct 12, 2019, 1:13 pm IST
சென்னையில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு செல்கிறார் ஜின்பிங்
Oct 12, 2019, 12:51 pm IST
உலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு
Oct 12, 2019, 12:41 pm IST
மோடி உருவம் பொறித்த தட்டை பரிசளித்தார் ஜின்பிங்
கைவினைப் பொருட்கள் கண்காட்சியை ஜின்பிங் பார்வையிட்டார்
Oct 12, 2019, 12:39 pm IST
ஜின்பிங்குக்கு காஞ்சி பட்டுப்புடவையை பரிசளித்தார் பிரதமர் மோடி
PM Narendra Modi and Chinese President Xi Jinping at an exhibition on artefacts and handloom at Taj Fisherman's Cove hotel in Kovalam, Tamil Nadu. pic.twitter.com/YQS48oQwi2
உலகின் தொன்மையான மொழியான தமிழில் பேசுகிறேன் - மோடி
Oct 12, 2019, 12:00 pm IST
மாமல்லபுரம் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது
இருநாடுகளிடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்படும்
பிரதமர் மோடியுடன் நண்பர்களாக நாங்கள் பேசினோம்- ஜின்பிங்
PM Narendra Modi: The Wuhan summit instilled a new momentum and trust in our relations and today's 'Chennai vision' is the start of a new era in India-China relations. #Modixijinpingpic.twitter.com/kd7kboLUdd
மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்- பிரதமர் மோடி
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்று பிரதமர் மோடி பேச்சு
சீன அதிகாரிகள் முன் பிரதமர் மோடி தமிழில் பேச்சு
Oct 12, 2019, 11:59 am IST
இந்தியா- சீனா இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது- ஜின்பிங் நெகிழ்ச்சி
மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பயனளித்தது- ஜின்பிங்
Oct 12, 2019, 11:58 am IST
இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 2,000 ஆண்டுகளாக ஆழமான கலாசார வர்த்தக உறவுகள் இருக்கின்றன- மோடி
Oct 12, 2019, 11:56 am IST
அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் பேச்சு
முறைசாரா மாநாடுகள் மூலமான பேச்சுவார்த்தைகள் குறித்து மோடி பெருமிதம்
Oct 12, 2019, 11:49 am IST
கோவளத்தில் அதிகாரிகள் பங்கேற்புடன் பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை
Kovalam (Tamil Nadu): Delegation level talks begin between Indian and China. PM Narendra Modi, National Security Advisor (NSA) Ajit Doval, External Affairs Minister S. Jaishankar, Foreign Secretary Vijay Gokhale are present. pic.twitter.com/zKGcBC0rV8
பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையே கோவளத்தில் 2-ம் நாள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
Tamil Nadu: Meeting underway between PM Narendra Modi and Chinese President Xi Jinping at Taj Fisherman's Cove hotel in Kovalam. pic.twitter.com/CmND1oOY5F
கோவளம் ஹோட்டலில் இருநாடுகளின் தலா 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
Oct 12, 2019, 10:21 am IST
கோவளம் பிஷர்மேன்ஸ் கேவ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார் சீன அதிபர் ஜின்பிங்.
ஹோட்டல் வாசலில் காத்திருந்து வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியும், ஜின் பிங்கும் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு பேட்டரி காரில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
Oct 12, 2019, 9:48 am IST
சீனா அதிபர் ஜின்பிங் கோவளம் செல்லும் வழியில் கலைநிகழ்ச்சிகள்
Oct 12, 2019, 9:46 am IST
சென்னை கோவளம் கடற்கரையில் கடல்நீரில் நனைந்தபடி நடைபயிற்சி மேற்கொண்டார் மோடி
சென்னை கிண்டி சோழா ஹோட்டலில் இருந்து சற்று நேரத்தில் கோவளம் புறப்படுகிறார் ஜின்பிங்
Oct 12, 2019, 8:25 am IST
சென்னை ஈசிஆர்- கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் இருந்து கோவளம் வரை போக்குவரத்து நிறுத்தம்
Oct 12, 2019, 8:24 am IST
2-வது நாளாக ஜின்பிங் தங்கி இருக்கும் கிண்டி சோழா ஹோட்டல் முன்பாக சீனர்கள் குவிந்தனர்
Tamil Nadu: Members of the Chinese diaspora gather outside ITC Grand Chola Hotel in Chennai where President Xi Jinping is staying. The Chinese President will meet PM Modi later today in Kovalam pic.twitter.com/dPCGIgiMxt
சென்னை கிண்டியில் இருந்து காலை 9 மணிக்கு சீனா அதிபர் ஜின்பிங் கோவளம் செல்கிறார்
Oct 12, 2019, 7:34 am IST
சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் வாகன போக்குவரத்துக்கு மீண்டும் தடை
Oct 12, 2019, 7:34 am IST
கோவளத்தில் இன்று பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் 2வது நாளாக பேச்சுவார்த்தை.
Oct 12, 2019, 7:34 am IST
கோவளம் ஹோட்டலில் இந்தியா- சீனா உயர்நிலைக் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
READ MORE
6:08 AM, 11 Oct
இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி, சென்னை முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
6:08 AM, 11 Oct
இரவு உணவுக்கு பிறகு கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சியை மோடி-ஜி ஜின்பிங் கண்டுகளிக்க உள்ளனர்
6:08 AM, 11 Oct
இன்று இரவு ஜி ஜின்பிங்கிற்கு, மோடி இரவு விருந்து அளிக்கிறார்
6:08 AM, 11 Oct
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள் உள்ளிட்ட புராதான சின்னங்களை இருவரும் பார்வையிடுவார்கள்
6:08 AM, 11 Oct
பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் மாலையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசுவார்கள்
6:09 AM, 11 Oct
ஜி ஜின்பிங் மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு புறப்படுவார்
6:09 AM, 11 Oct
மதியம் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார்
6:09 AM, 11 Oct
பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
6:09 AM, 11 Oct
மாலை 5 மணிக்கு கோவளத்திலுள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் நட்சத்திர ஹோட்டலில் இருந்து, மாமல்லபுரம் செல்கிறார் மோடி
6:09 AM, 11 Oct
12.35 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார் மோடி
6:09 AM, 11 Oct
இன்று மதியம் 12.30 மணிக்கு, டெல்லியிலிருந்து, சிறப்பு விமானத்தில், சென்னை வருகிறார் பிரதமர் மோடி
7:08 AM, 11 Oct
மாமல்லபுரத்தில் அரசு மதுபானக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடல்
7:08 AM, 11 Oct
சென்னை, புறநகரில் சில பிரதான சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை
7:09 AM, 11 Oct
மோடி--ஜின்பிங் பேச்சுவார்த்தைக்காக சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்
7:09 AM, 11 Oct
சீனா அதிபர் ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு
7:18 AM, 11 Oct
மாமல்லபுரம் கடற்பரப்பில் பாதுகாப்பு பணியில் போர்க்கப்பல்கள்
Tamil Nadu: The 2nd informal meeting between PM Narendra Modi and Chinese President Xi Jinping to begin in Mamallapuram today. Indian Navy and Indian Coast Guard have deployed warships, at some distance from the shore in Mamallapuram, to provide security from any seaborne threat. pic.twitter.com/wmO2ImJWcC
மோடி-ஜின்பிங் சந்திப்பு நேரத்தில் சென்னையில் விமானங்கள் பறக்க தடை
7:56 AM, 11 Oct
ஓஎம்ஆர் சாலையில் உள்ள 5 சுங்க சாவடிகளில் நாவலூரில் மட்டும் கட்டணம் இல்லாமல் அனுமதி
7:56 AM, 11 Oct
கிழக்கு கடற்கரையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஓஎம்ஆர் சாலைக்கு மாற்றிவிடப்பட்டன
7:56 AM, 11 Oct
சென்னை ஓஎம்ஆர் சாலை நாவலூர் சுங்க சாவடியில் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதி
8:30 AM, 11 Oct
சீன அதிபர் ஜி ஜிங்பின் வருகைக்காக சென்னையில் தோட்டக்கலைத் துறை அலங்காரம்.
3 டன் காய்கறிகள் கொண்டு தோட்டக்கலைத் துறை அலங்காரம்.
தமிழக அரசு சார்பாக பிரம்மாண்டமாக காய்கறி மூலம் அலங்காரம்.
Tamil Nadu: Dept of Horticulture has decorated a huge gate near 'Pancha Rathas' in Mamallapuram where PM Modi & Chinese President, Xi Jinping are expected to visit later today. 18 varieties of vegetables & fruits,brought from different parts of the state, used in this decoration. pic.twitter.com/L8QXhWw34B
பிரதமர் மோடி இன்று காலை 11.15 மணிக்கு சென்னை வருகிறார்
9:43 AM, 11 Oct
ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் குவிந்த இசைக்கலைஞர்கள்
Tamil Nadu: Chenda Melam (traditional orchestra of Kerala) performers arrive outside Chennai International Airport to welcome the President of China, Xi Jinping, ahead of his arrival today. pic.twitter.com/62elDCgDjk
ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் தோரணவாயில்
Tamil Nadu: Chennai International Airport all decked up ahead of the arrival of President of China, Xi Jinping. The Chinese President and PM Narendra Modi will begin their second informal meeting in Mahabalipuram today. pic.twitter.com/FU73rzT3Lm
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னை வந்த 5 பேர் கைது.
கர்மா, சரிங்ராம் ஜியால், சலாம் ராவ் சோர், டென்ஜின் செராப், ஜம்புலிங்கம் கைது.
10:41 AM, 11 Oct
சென்னை விமான நிலையம் வந்திறங்கும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகிறார்
Tamil Nadu: President of China, Xi Jinping will arrive at ITC Grand Chola Hotel in Chennai after his arrival at Chennai International Airport. The second informal summit between Prime Minister Narendra Modi and him, will begin in Mahabalipuram today. pic.twitter.com/haWBur6dhP
PM Modi-Xi Jinping Summit Live News Updates in Tamil: Check out the live coverage of PM Narendra Modi and Chinese President Xi Jinping meet in Mahabalipuram, Chennai for the second informal summit from October 11-12.