“அடடா.. இப்படி ஒரு வரவேற்பு இதுவரை இல்லையே?” - காரை விட்டு இறங்கி உற்சாகமாக கையசைத்த பிரதமர் மோடி!
சென்னை : தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதால் பிரதமர் மோடி உற்சாகமடைந்துள்ளார்.
Recommended Video
பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வரவேற்றனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு ஐ.என்.எஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகிறார்.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, அவர் அடையாறு ஐ.என்.எஸ் விமான தளத்திலிருந்து காரில் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் வழி நெடுக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருக்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதையடுத்து வாகனத்தில் இருந்து வெளியே இறங்கி தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் பிரதமர் மோடி.
கடந்த அதிமுக ஆட்சியின்போதெல்லாம் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சியினர் கருப்புக்கொடி காட்டப்படுவது வழக்கம். ஆனால், இன்று அதுபோல எதிர்ப்புகள் இல்லாமல் மிக விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கான வரவேற்பு கிடைத்துள்ளதால் பிரதமர் மோடியும் மிகவும் உற்சாகமடைந்து காரில் இருந்து வெளியே வந்து கையசைத்துள்ளார்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications