திமுக கூட்டணிக்கு நூல் விட்டு பார்த்த பாஜக.. ஸ்டாலின் முடிவு இதுதான்! இவர் என்ன இப்படி சொல்லுறாரே!
சென்னை: பாஜகவிற்கு 270+ இடங்கள் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் திமுகவிடம் ரகசியமாக பேச வேண்டும். திமுகவிடம் ரகசியமாக பாஜக பேச முயல்வதாக செய்திகளை போட்டு பாஜக தூண்டில் போட்டு பார்க்கிறது என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
சிக்கல் மேல் சிக்கல்: அதே சமயம் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இன்னும் சில கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றன . இன்னும் சிலர் என்டிஏ கூட்டணிக்கே கூட மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் பிளான் பி எப்படி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுகவின் உதவியை கூட பாஜக நாட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன.
பேட்டி: இது தொடர்பாக சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவிற்கு 270+ இடங்கள் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் திமுகவிடம் ரகசியமாக பேச வேண்டும். திமுகவிடம் ரகசியமாக பாஜக பேச முயல்வதாக செய்திகளை போட்டு பாஜக தூண்டில் போட்டு பார்க்கிறது. திமுகவை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு அவர்களிடம் தூது போவது பாஜக ஏன் செல்ல வேண்டும். திமுக போகாது. திமுக கண்டிப்பாக பாஜகவுடன் போகாது என்று தெரியும்.

திமுகவிற்கு அப்படி எந்த நிலைப்பாடும் இல்லை. திமுக இந்தியா கூட்டணியில் உள்ளது. அதில் நீடிக்கும்.
ஆனால் பாஜக விடாமல் எல்லோரிடமும் போய் பேசிக்கொண்டு இருக்கிறது. எப்படியாவது கூட்டணி வேண்டும் என்று போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் நிலைமை. பாஜகவிற்கு 270+ இடங்கள் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் திமுகவிடம் ரகசியமாக பேச வேண்டும்.
வெற்றிபெற போகிறோம் என்று அவர்கள் கூலாக இல்லை. அவர்களிடம் பதற்றம் உள்ளது. உத்தர பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசியை அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சனையாக மாற்றிவிட்டனர். இதை கவுண்டர் செய்ய மோடி திணறுகிறார். அதோடு பாஜகவிற்கு சிக்கலே அவர்களின் கோர் டீமை அவர்களால் வேலை பார்க்க வைக்க முடியவில்லை.
இந்த முறை பாஜக 270 எடுத்தால் கூட ஆட்சி அமைக்க முடியாது. பாஜக 270 எடுத்தால் கூட என்டிஏ கூட்டணி இருக்காது. என்டிஏ கூட்டணி உடையும், என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications