வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும்.. ஆயுதம் செய்வோம்.. ஔவை, பாரதி பாடலை பாடிய மோடி!
சென்னை: கல்லணையின் சிறப்புகளையும் உள்நாட்டில் உற்பத்தியை செய்ய கூற ஔவையார் பாடிய பாடலை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். அவர் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார்.
அவர் கூறுகையில் கல்லணை கால்வாயை சீரமைக்கும் திட்டம் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டுகள்.

நெற்களஞ்சியம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து பராமரிக்க வேண்டும். நீர் ஆதாரங்களை சேமிப்பது என்பது உலகாயுத பிரச்சனை என தெரிவித்த மோடி ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டினார்.

இதுதான் வரிகள்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்று ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டினார். இதன் அர்த்தம் விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

வரிகளின் அர்த்தம்
எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்பது இந்த வரிகளின் அர்த்தமாகும்.

பாரதி பாடல்
அது போல் சுயசார்பு திட்டத்தை எடுத்துக் கூற பாரதியாரின் பாடலையும் பிரதமர் மோடி பாடி காண்பித்தார். ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்" என்றும் "உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்" என்று பாரதியார் பாடலையும் மேற்கோள் காட்டி மோடி பேசினார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications