நான் தமிழ்நாட்டுக்கு வந்தால் சிலர் வயிற்றில் புளியை கரைக்கிறது.. பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!
சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, "சமீப சில காலமாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது." எனப் பேசியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சென்றார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாவனி என்கிற 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வு முடிந்த பிறகு, சென்னை விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் வருகை தந்தார். அப்போது, பாஜக சார்பில் வழிநெடுகிலும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் மோடி. 'மீண்டும் மோடி சர்க்கார்' என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி பேசுகையில், "சென்னைக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் எனக்கு வலிமை கிடைக்கிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளி, அழியாப்புள்ளி சென்னை. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை முக்கியப் பங்கு வகிக்கிறது.
சென்னை நகரம் மிகப் பழமையானது. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு நீண்டது. என் மீதான உங்கள் அன்பு மிகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், சமீப சில காலமாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு வலுவடைகிறது என்பதால் சிலர் அச்சப்படுகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக வலிமை பெற்றுள்ளதை காட்டுகிறது சென்னை பொதுக்கூட்டம். வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதோடு, வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு என்பதும் மோடியின் இலக்கு." என உரையாற்றியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications