விடாது துரத்தும் தாமரை.. பிடி தராத எடப்பாடி.. இன்று மோடி வந்து போனதும்.. பாஜக செய்ய போகும் சம்பவம்
சென்னை: அதிமுகவை மீண்டும் உள்ளே இழுத்து பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை பாஜக செய்து வருகிறதாம்.
பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் சிலர். குறைந்தது அதற்கான முயற்சிகளாவது நடக்கும் என்கின்றனர். கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.

2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணம்?: 1. தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜககருதுகிறது , இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. 2, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை. 3. 2024ல் கூட்டணி இருந்தால்தான் , 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். 4. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வருவதாக கூறப்படுகிறது.
சாமியார்: கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி ஒரு மாதம் ஆகியும் இதுவரை பாஜக கூட்டணிக்கு வர யாரும் தயாராக இல்லை. பாமக, தேமுதிக என்று யாரும் அதிமுக கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை. இந்த நிலையில் அதிமுகவை சமாதானம் செய்து பாஜக சார்பாக கோவையை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் களமிறக்கப்பட்டு உள்ளாராம்.
இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவிற்குள் இழுக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். திரைமறைவில் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம்.
பேச்சுவார்த்தை: இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் இன்று பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற பின் வேறு விதமான சில நடவடிக்கைகளை பாஜக எடுக்கும் என்கிறார்கள். இன்று மோடி வந்து போனதும் அதிமுகவை வழிக்கு கொண்டு வருவதற்கான வேறு சில நடவடிக்கைளை பாஜக எடுக்கும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
மோடி வருகை: பிரதமர் மோடி 04.03.2024 அன்று மாலை 17.00 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது அவசியம்.
அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார்.
பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
மோடி பயணம்: இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அரசியல் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை முறையாக இங்கே மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூட்டணி தலைவர்களை பாஜக மேடையில் ஏற்றும் வாய்ப்புகள் உள்ளன.
டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உட்பட சிலர் மேடைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. இது போக ஜிகே வாசன், ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோரும் இந்த நிகழ்வில் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் கூட்டணி தொடர்பான முக்கியமான விஷயங்களை நிகழ்ச்சி முடிந்த பின் மோடி அண்ணாமலையிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications