75வது வயதில் அடியெடுத்து வைத்த பிரதமர் மோடி..நீண்ட ஆயுளோடு வாழ முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்றுடன் அவர் தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் நேற்று இரவு முதலே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியின் வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று காலையில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் , ‛‛பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛பிரதமர் மோடிக்கு அவரது 75வது பிறந்தநாளின் மகிழ்ச்சியான தருணத்தில், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதும் போல் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எல்லா வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என கூறியுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பிரச்சனை இருக்கும் நிலையில் டிரம்ப், தொலைபேசியில் மோடியை தொடர்பு கொண்டு பேசியதோடு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு மோடி, டிரம்புக்கு நன்றி கூறினார். அதேபோல் பிற நாடுகளின் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications