மாதம் ரூ.55 கட்டினால் போதும்! 3,000 பென்ஷன் கிடைக்கும்.. ஓய்வு காலத்தில் கவலையே வேணாம்.. செம ஸ்கீம்!
சென்னை: அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வு வயது காலத்தில் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் அளிக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்தும் இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் இணையலாம்.. எவ்வளவு செலுத்த வேண்டும்.. முதிர்வு தொகை முன் கூட்டியே பெற வாய்ப்புள்ளதா என்பது பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டு மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. விவசாயிகளுக்கான நிதி உதவி, மகளிருக்கான நிதி, ஓய்வூதிய திட்டம் என பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசு, பொதுத்துறை என அமைப்புசார் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வு காலத்தில் மாதம் தோறும் பென்ஷன் அளிக்கப்படுகிறது.

மாதம் ரூ.55 செலுத்தி வந்தால்
ஆனால், கட்டிட தொழிலாளிகள், கூலி வேலை செய்பவர்கள், சாலையோர வியபாரிகள் என சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்தததுதான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டம். இந்த திட்டம், அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது ஆகும். ஓய்வு காலத்தில் நிதி உதவி அளிக்கும் வகையிலும் யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் யார் யார் இணையலாம். என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். எவ்வளவு செலுத்த வேண்டும்.. முதிர்வு தொகை முன் கூட்டியே பெற வாய்ப்புள்ளதா என்பது பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற இந்த திடத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் தனி நபர்கள் மாதம் தோறும் ரூ.55 செலுத்தி வந்தால், நிலையான பென்ஷன் தொகையாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும். ஓய்வு வயதை எட்டிய பிறகு இந்த தொகை கிடைக்கும். குறைவான வருவாய் ஈட்டுபவரக்ளுக்கு கூட ஓய்வு காலத்தில் நிதி ஆதாரத்தை அளிக்கும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணயலாம்?
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதில் இணைய முடியும். எடுத்துக்காட்டாக குப்பை அள்ளுபவர்கள், சலவை தொழிலாளிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பலதரப்பட்ட பணிகளிளும் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தின் பெரும் பலன் என்னவென்றால் அரசும் சரிசம பங்களிப்பை அளிக்கிறது. அதாவது, பயனாளிகள் ரூ.200 மாதம் செலுத்தினால் அரசும் பென்ஷன் ஃபண்டில் ரூ.200 செலுத்தும்.
திட்டத்தில் எப்படி இணைவது?
18-வயதில் இருந்தே இந்த திட்டத்தில் பயனாளிகள் இணையலாம், 18-வயதில் சேர்ந்தால் மாதம் ரூ.55 செலுத்தினால் போதும். ஓய்வு காலத்தில் ரூ.3 ஆயிரம் கிடைக்கும். 29 வயதில் இணைந்தால் மாதாந்திர பங்களிப்பு தொகையாக ரூ.80 செலுத்த வேண்டும். எந்த அளவு பங்களிப்பு அளிக்கிறோமோ அதற்கு ஏற்றப்படி பென்ஷன் தொகை மாறுபடும். இதே தொகைக்கு ஏற்றார் போல அரசும் பங்களிக்கிறது. இதனால், இந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பையும் சேர்த்து ரூ.160 சேரும்.
குறைந்த வருவாய் ஈட்டுபவர்கள், அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மிகச்சிறந்த திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் இணைய அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஜன் தன் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த திட்டத்தில் இணையலாம். மாத வருமான ரூ.15 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் இணையும் போது முதல் மாதம் மட்டும் ரொக்கமாக பங்களிப்பு செய்ய வேண்டும். அதன்பிறகு, அக்கவுண்டில் இருந்து தானாகவே ஆட்டோ டெபிட் செய்யப்படும். இதற்கான ஒப்புதலையும் அளிக்க ஏண்டும்.
எதிர்பாராத சம்பவங்க்ள் நடந்தால்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் 60 வயதை எட்டிய சமயத்தில் எதிபாராத காரணங்களால் இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஓய்வூதியம் அளிக்கப்படும். 50 சதவீத உத்தரவாத மட்டும் அளிக்கப்படும். 60 வயதுக்கு முன்பாக இறந்துவிட்டால் மனைவி/ கணவன் இந்த திட்டத்தை தொடரலாம். ஒருவேளை திட்டத்தில் தொடர விருப்பம் இன்றி பணத்தை பெற்றுக்கொள்ள விரும்பினாலும் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். வங்கி சேமிப்பு கணக்கு வட்டியுடன் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணைய முடியாது?
என்.பி.எஸ் எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு கீழ் வருபவர்கள், வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளிட்டவற்றில் பயன்பெறுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.












Click it and Unblock the Notifications