கேஸ் சிலிண்டர் வேணுமா? பிரதான் மந்திரியின் இலவச சமையல் சிலிண்டருக்கு எப்படி விண்ணப்பிப்பது? செம ஈஸி
சென்னை: வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்தியா முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016ல் துவக்கி வைத்தார். இந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கும் இந்திய அரசின் திட்டமாகும்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவே, இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது.. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உஜ்வாலா யோஜனா திட்டம்: வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படுவதால், நம்முடைய சமூகத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, அவர்களின் ஆரோக்கியமும், அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், விறகு, சாணம், பிற சமையல் எரிபொருளுக்காக செலவிடும் நேரத்தையும் பெண்களுக்கு குறைக்க செய்கிறது.
இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவே பலனடைந்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு புதிய பயனாளிக்கும் ரூ.1,600 நிதியுதவியும் வழங்கப்படுவதால், பயனாளிகள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.. கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்: இந்த திட்டத்தின் பயனாளிகள் பெண்களே என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள், 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். முக்கியமாக இந்திய குடிமகளாக இருக்க வேண்டும்.. அதேபோல, இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் அவருக்கு இருக்க கூடாது.
விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும்.. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் BPL தரவுத்தளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்த வேண்டும்.. விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்) பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது:
- https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
- "Apply for New Ujjwala 2.0 Connection" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்ய வேண்டும்
- தேவைப்படும் சேவையில் எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட என அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.. அடையாள ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்ற வேண்டும்
- விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
ஆஃப்லைன் விண்ணப்பம்: விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட பிறகு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு இறுதியில் வழங்கப்படும். நீங்கள் PMUY ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு, உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரை தொடர்பு கொள்ள வேண்டும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications