PMFBY.. 8231 கட்டினால்.. 1.64 லட்சம் வரை கிடைக்கும்.. செங்கல்பட்டு விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் அதிகம் விளைகிறது. அதேபோல் காய்கறிகளும் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. பயிர் செய்யும் விவசாயிகள் காப்பீடு எடுப்பது நல்லது என்பதால், இப்போது பலரும் காப்பீடு எடுக்கிறார்கள். அவர்களுக்காக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ஒவ்வொரு காய்கறிக்குமான காப்பீடு தொகை குறித்து விளக்கி உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை சாலையான தாம்பரம் பகுதியில் தொழில் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. அங்கு விவசாய நிலங்கள் மிக குறைவாகவே இருக்கும். ஆனால் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு மதுராந்தகம் சாலை, செங்கல்பட்டு மகாபலிபுரம் சாலை, செங்கல்பட்டு திருப்போரூர் சாலை, சிங்கபெருமாள் கோவில் முதல் மகாபலிபுரம் சாலை சென்னையின் புறநகர் பகுதி முழுக்கவே விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தினை பொறுத்தவரை ஏராளமான ஏரிகள் இருக்கின்றன. பாலாறு ஓடுகிறது. எனவே தண்ணீர் பிரச்சனையால் விவசாயம் செய்ய முடியாத நிலை என்பது மிக குறைவு. அதேநேரம் சென்னை வேகமாக வளருவதன் காரணமாகவே தாம்பரம முதல் செங்கல்பட்டு வரை விவசாயம் குறைவாக இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் அதிகம் விளைகிறது. அதேபோல் காய்கறிகளும் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. பயிர் செய்யும் விவசாயிகள் காப்பீடு எடுப்பது நல்லது என்பதால், இப்போது பலரும் காப்பீடு எடுக்கிறார்கள். அவர்களுக்காக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு நடப்பாண்டு பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட பிரிக்கா மற்றும் பயிர்கள் விவரம் பின்வருமாறு:-
பாலூர் - கத்தரி, வெண்டை, வாழை. பி.வி. களத்தூர் -வெண்டை, கத்தரி. திருக்கழுக்குன்றம் - கத்திரி, நெரும்பூர் - கத்தரி. மாமல்லபுரம் -கத்தரி. ஒரத்தி - வெண்டை, கத்தரி. கரும்பாக்கம் - கத்தரி, வெண்டை. வையாவூர் -கத்தரி, வெண்டை. மதுராந்தகம் - கத்தரி, வெண்டை. லத்தூர் -கத்தரி, வெண்டை. செய்யூர் -கத்தரி, வெண்டை. கொடூர் - கத்தரி, வெண்டை.
வாழை பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு பிரீமியமாக ரூ 8231.3-ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதிக்குள் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கத்தரி பயிருக்கு பிரீமியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.3019.6-ஐ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
வெண்டை பயிருக்கு பிரீமியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2945.5 -ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பயிர்காப்பீடு செய்வதன் மூலம் மழை மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்யலாம். கடன் பெறா விவசாயிகள் அருகில் உள்ள பொது இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். பயிர் காப்பீடு விவரங்களை www.pmfby.gov.in அல்லது பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் செயலி வழியாக பார்க்கலாம். மேலும் இது பற்றி தகவல் தெரிந்து கொள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஹெக்டேருக்கு ரூ. 8231.3 பிரீமியம் செலுத்தினால், அதிகபட்ச காப்பீடுத் தொகை என்பது சுமார் ரூ. 1,64,626 ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் நீங்கள் கத்தரி பயிருக்கு பிரீமியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.3019.6-ஐ செலுத்தி இருந்தால், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீடுத் தொகை சுமார் ரூ. 60,392 ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
காப்பீடு தொகை என்பது பிரதமர் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒரு விவசாயி காப்பீடு தொகையில் ஒருபயிருக்கு 5 சதவீதம் செலுத்த வேண்டியது வரும். பொதுவாகவே பயிர் காப்பீடு பிரீமியம் விகிதங்கள் மற்றும் காப்பீடுத் தொகைகள் ஆண்டுக்கு ஆண்டும், மாவட்டத்திற்கு மாவட்டமும், பருவத்திற்குப் பருவமும் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே துல்லியமான காப்பீடுத் தொகை குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டு அறிய வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications