என்ன நடந்தாலும் சரி.. உறுதியாக அந்த சீட் வேண்டும்! அடம் பிடிக்கும் அன்புமணி.. பாமகவால் அலறும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் எப்படியாவது ராஜ்ய சபா சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருக்கிறதாம்.

லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

PMK Anbumani is keen on getting 1 Rajya Sabha seat from either BJP or AIADMK alliance

முறிந்த அதிமுக கூட்டணி: அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டதுதான் பாமக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள்.

பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.

பாமக முற்றுப்புள்ளி: அதன்பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை.

யாருடன் கூட்டணி: இந்த நிலையில்தான், 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்றும் ஒரு பக்கம் பேச்சு நடந்து வருகிறது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.

அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமனாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிதான் அன்புமணி கோரிக்கை வைக்க உள்ளாராம்..

பாஜக ரியாக்சன்: அமைச்சர் பதவிக்கு பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய அளவில் தனிப்பெரும்பான்மை பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அப்படி இருக்க.. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனவே அமைச்சர் பதவியை பின்னர் பார்க்கலாம்.

அன்புமணிக்கு மீண்டும் ராஜ்ய சபா பதவி, இந்த முறை பாஜக சார்பாக வழங்குவதற்கு வேண்டுமானால் ரெடியாக இருக்கிறோம் என்று பாஜக கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம். இதனால் பாஜக பக்கம் செல்ல அன்புமணிக்கு விருப்பம் உள்ளதாம்.

ராமதாஸ்: அதே சமயம் அன்புமணியின் இந்த திட்டத்தை ராமதாஸ் விரும்பவில்லையாம். பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டில் பாமகவிற்கு மரியாதை குறையும். அதனால் பாமக அதிமுக கூட்டணியே சரியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இதுதான் சரியாக இருக்கும் என்பதால்.. 2024லும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.

அதே கூட்டணி தொடர வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம். மேலும் பாமகவை உடைக்க பாஜக முடிக்க பார்க்கிறது. அதனால் பாஜகவோடு சேருவது சரியாக இருக்காது என்று ராமதாஸ் நினைக்கிறாராம்.

இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியும் ஓகே. ஆனால் ஒரு ராஜ்ய சபா சீட்டு + 8 தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறாராம். அப்பா சொல்வதை கேட்க ரெடி.. ஆனால் கண்டிப்பாக 1 ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று அன்புமணி உறுதியாக கேட்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+