Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PMK protest: அன்புமணி தலைமையில் போராட்டம்.. அதிமுக, தவெக ஆப்சென்ட்! யார் யார் வந்து இருக்காங்க பாருங்க.. லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக அன்புமணி தரப்பில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பாமக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். பாமக கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக, தவெக பங்கேற்கவில்லை. பாஜக சார்பில் கரு நாகராஜன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி அன்புமணி தரப்பு பாமக இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக மற்றும் விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

pmk-anbumani-protest-in-chennai-today-demanding-caste-wise-census-focus-on-aiadmk-and-tvk-particip

சாதிவாரி கணக்கெடுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக அன்புமணி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல, தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், கேஏ செங்கோட்டையனை சந்தித்தும் கே பாலு அழைப்பு விடுத்து இருந்தார். இதனால், சென்னையில் இன்று நடைபெறும் பாமக ஆர்ப்பாட்டத்தில் மேற்கூறிய கட்சிகள் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 11.45 மணியளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, தவெக கட்சிகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதே சமயம் பாஜக சார்பில் கரு நாகராஜன் கலந்துகொண்டார். புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அமமுக சார்பில் செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எந்தெந்த கட்சிகள் பங்கேற்றன?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அன்புமணி நடத்திய இன்றைய போராட்டத்தில் பாஜக, அமமுக, சீமானின் நாம் தமிழகர் கட்சி உள்பட பல கடசிகள், அமைப்புகளும் கலந்துகொண்டன.

* தென்னிந்திய பார்வார்டு பிளாக்
* பாஜக
* அமமுக
* நாம் தமிழர் கட்சி
* தமிழர் தேசம்
* பெருந்தலைவர் மக்கள் கட்சி
* தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி

* புரட்சி பாரதம்
* இந்திய ஜனநாயகக் கட்சி
* கொங்கு இளைஞர் பேரவை
* தமிழக பகுஜன் சமாஜ் கட்சி
* இந்திய தேசிய லீக்
* யாதவ மகா சபை
* நாடார் மகாஜன சங்கம்

மேலும் சில இயக்கங்களும், அமைப்புகளும் அன்புமணி தரப்பு பாமகவுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றன.

பங்கேற்காத அதிமுக, தவெக

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்றால் அது கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என்றும் கருதப்பட்டது. எனினும், அதிமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காது என்று தகவல் வெளியாகியனது.. அதேபோல, ஈரோட்டில் நாளை விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெறுகிறது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக தமிழகத்தில் வெளி அரங்கில் நடைபெறும் விஜய் கூட்டம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் தவெக நிர்வாகிகள், ஈரோட்டில் முகாமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் தவெகவும் அன்புமணி தரப்பு நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காது என்று சொல்லப்பட்டது. அதேபோல் அதிமுக, தவெக கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக பாஜக, அமமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருப்பது கூட்டணிக்கான அச்சாரமாக அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+