பாமக சார்பில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் லிஸ்ட் ரிலீஸ்! ஜிகே மணி, திலக பாமா போட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் சட்டசபைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 19 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இரு கட்டங்களாக வெளியானது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ளது.

 PMK Candidate List 2021 For Tamil Nadu Assembly Election

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக 177 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து நேற்றைய தினம் தேமுதிக வெளியேறியது. இந்த நிலையில் அதிமுக முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

PMK Candidate List 2021 For Tamil Nadu Assembly Election

இதையடுத்து பாஜக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரிய கட்சியான பாமக முதற்கட்டமாக 19 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டது.

அதன்படி

  • பென்னாகரம்- ஜிகே மணி
  • ஆத்தூர்- திலக பாமா
  • கீழ் பென்னாத்தூர்- செல்வக்குமார்
  • திருப்போரூர்- திருக்கச்சூர் ஆறுமுகம்
  • ஜெயங்கொண்டம்- கே பாலு
  • ஆற்காடு- இளவழகன்
  • திருப்பத்தூர்- டி கே ராஜா
  • தருமபுரி- எஸ் பி வெங்கடேஸ்வரன்
  • சேலம் மேற்கு - இரா அருள்
  • செஞ்சி- எம்.பி.எஸ். ராஜேந்திரன்
  • மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிச்சாமி
  • விருத்தாசலம்- ஜே கார்த்திகேயன்
  • சேப்பாக்கம்- கஸ்ஸாலி
  • நெய்வேலி- ஜெகன்
  • கும்மிடிபூண்டி- பிரகாஷ்
  • சோளிங்கர்- அ.ம.கிருஷ்ணன்
  • கீழ்வேளூர்- வேத. முகுந்தன்
  • காஞ்சிபுரம்- பெ. மகேஷ்குமார்
  • மைலம்- சிவக்குமார்

மீதமுள்ள 4 வேட்பாளர்களின் பட்டியலை அடுத்தகட்டமாக வெளியாகும் என தெரிகிறது. அந்த பட்டியலில் அன்புமணி போட்டியிடுவாரா என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+