தனி அறையில் நடந்த ஆலோசனை.. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை? வெளியான தகவல்
சென்னை: பாஜக - பாமக கூட்டணி தொகுதி ஒப்பந்தம் இன்று திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் கையெழுத்தானது. பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மறுபக்கம் அதிமுக கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது.

பாஜகவும் ஏறத்தாழ கூட்டணியை இறுதி செய்துவிட்டது. அதிமுகவுடன் கூட்டணி செல்லும் எனக் கூறப்பட்ட பாமக, திடீர் திருப்பமாக பாஜகவுடன் கைகோர்த்தது. பாஜக - பாமக இடையே இன்று காலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திண்டிவனம் அருகே உள்ள தைலபுரம் இல்லத்திற்கு இன்று காலை அண்ணாமலை, எல் முருகன் ஆகியோர் வந்தனர்.
பாஜக - பாமக கூட்டணி: பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே அண்ணாமலை - ராமதாஸ் உள்ளிட்டோர் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
10 தொகுதிகள் என்னென்ன?: விழுப்புரம், சிதம்பரம், மத்திய சென்னை, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்பதூர், சேலம் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. பாமகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே கூறினார். ராஜ்யசபா சீட் தொடர்பாக எதுவும் கூறவில்லை.
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி











Click it and Unblock the Notifications