தவெக, பாமக, தேமுதிக கூட்டணி.. விஜய் மெகா திட்டம்.. லிஸ்ட் இன்னும் பெருசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கட்சியின் அறிமுக மாநாட்டிலேயே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று ஓபனாக பேசினார் விஜய். இந்நிலையில் வருகிற 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு விஜய் தலைமையில் பாமக, தேமுதிக ஆகியவற்றுடன் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து பிரம்மாண்ட கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் விமர்சகர் மணிகண்டன் வீராசாமி கூறியுள்ளார்.

ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தவெக தலைவர் விஜய் விரைவில் முழு நேர அரசியலில் இறங்க உள்ளார். அடுத்த மாதம் தொடர்ச்சியாக அவர் 45 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபக்கம் விஜய் மீது தவாக தலைவர் வேல்முருகன் வைத்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TVK Vijay

இதுகுறித்து அரசியல் விமர்சகரும், விஜய் ஆதரவாளர் மணிகண்டன் வீராசாமி, "வேல்முருகன் தவறான தகவல்களை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். வேல்முருகன் தன் கட்சியை TNVK என்று தான் பதிவு செய்துள்ளார். விஜய் TVK என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். தமிழக அரசியலில் விஜய் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறார். பல இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

நமக்கு எல்லாம் ஒரு குழந்தையை படிக்க வைக்கவே கடினமாக உள்ளது. கல்வி விருது மூலம் பல நூறு குழந்தைகளுக்கு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே உதவி செய்து வருகிறார். நல்ல விஷயங்கள் செய்யும்போது வரவேற்காவிடினும் இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்தை முன் வைக்காமல் இருக்க வேண்டும்.

நாங்கள் எதிர்வினையாற்றிய பிறகு வேல்முருகனுக்கு வலிக்கிறதா. உங்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. வேல்முருகன் முதிர்ச்சியான அரசியல்வாதியே இல்லை. இப்போது கூட அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்கிறார்கள். இனி எங்களின் எதிர்வினை இன்னும் கடுமையாகும். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

திமுக இதை நேரடியாக பேச முடியாது என்பதால், வேல்முருகனை கைப்பாவையாக வைத்து இப்படி பேச வைக்கிறார்கள். திமுக கூட்டணியில் வேல்முருகனுக்கு ஒரே ஒரு சீட் தான் உள்ளது. அதுவும் சொந்த சின்னம் கூட இல்லை. உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது கூடுதலாக ஒரு சீட் பெற இப்படி பேசி வருகிறார். திமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டது.

அதைப்பற்றி ஏன் வேல்முருகன் பேசவில்லை. வேல்முருகன் விஜய்யை விமர்சிக்கவில்லை என்கிறார். அப்படியென்றால் அவர் கருணாநிதியையா, மு.க ஸ்டாலினையா, உதயநிதியையா யாரை விமர்சித்தார் என்று விளக்கமளிக்க வேண்டும். வேல்முருகனே சில திரைப்படங்களில் நடித்துள்ளார். விமர்சனம் வைப்பதற்கு முன்பு தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

அரசியலில் யாருடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதில் தவெக தெளிவாக உள்ளது. பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி. அவர்களுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டனர். டிசம்பர் வரை நேரம் இருப்பதால் கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிச்சயமாக தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்.

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு வரும் கட்சிகளுடன் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். தவெக தலைமையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கூட விலகி கடைசி நேரத்தில் சில கட்சிகள் இணையலாம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அதிருப்தியாக தான் உள்ளது.

அரசியலில் யாருக்கும் நிரந்தர எதிரி கிடையாது. அதேநேரத்தில் பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. மக்கள் விஜய்யை கைவிட மாட்டார்கள். அதனால் நல்ல கூட்டணி அமையும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+