திடீரென டாக்டர் ராமதாஸ் எமோஷனல்.. "ஐயா.. ப்ளீஸ்.. கலங்காதீங்க".. ஓடிச்சென்று ஆறுதல்படுத்திய அன்புமணி

டாக்டர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் ஆசுவாசப்படுத்தி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஐயா கலங்க வேண்டாம்.." என்று நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸை ஆறுதல்படுத்தி உள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்..!

கடந்த எம்பி தேர்தலில், அதிமுகவில் முன்னதாகவே துண்டு போட்டு ஏராளமான சீட்டுகளை அள்ளியது பாமக.. திமுகவில் கூட்டணி சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிமுக இந்த துரித நடவடிககையில் அப்போது இறங்கியது.

அதற்கு காரணம், "2019 எம்பி தேர்தலோடு, 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது... அதில் வட தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருந்ததால் தான் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும்.. அதனால்தான், பாமகவுடன் கூட்டணி அதிமுக கூட்டணி வைத்தது.. ஆனால், அந்த தேர்தலாகட்டும், அதற்கு பிறகு நடந்த தேர்தல்களாகவும் பாமக அவ்வளவாக சோபிக்கவில்லை.

 கூட்டணி

கூட்டணி

இந்த முறை தேர்தல் நெருங்கி வருகிறது.. கூட்டணி பற்றிய அனைத்து கட்சிகளும் பேச்சை எடுத்து வரும் நிலையில், பாமகவிடமும் அப்படி கூட்டணி உறுதி செய்ய முயற்சி நடந்தது.. 2 அமைச்சர்களும் தைலாபுரம் சென்றார்கள்.. ஆனால், பாமக வைத்த கோரிக்கைகளை கேட்டு அப்படியே யூடர்ன் அடித்து திரும்பி வந்துவிட்டனர்.

 அறிவிப்பு

அறிவிப்பு

மேலும் தன் முடிவை, வரும் 31-ம் தேதி, அதாவது இன்றைய தினம் அறிவிக்க போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார்.. அதன்படியே இன்று கூட்டம் நடந்துள்ளது.. தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. ஆனால், நிர்வாகிகளிடம் மனசு உடைந்து போய் பேசினாராம் டாக்டர் ஐயா.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

"ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளை செய்வார்கள்.. அந்த மாதிரி பாமகவினரும் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும்.. கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்ததுக்கு காரணமே நிர்வாகிகள் சரியாக தேர்தல் வேலையை செய்யாததான்.. பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக தேர்தல் வேலை செய்யாததான்.. தனியாக தேர்தலில் நின்று 25 தொகுதிகளில் கூட நாம ஜெயிக்காவிட்டால், எதுக்காக கட்சி நடத்தணும்" என்றும் கேட்டுள்ளார் ராமதாஸ்.

 ஆறுதல்

ஆறுதல்

டாக்டர் ஐயா, இப்படி பேசியபோது மனம் நொந்து போயுள்ளார்.. அவர் எமோஷனல் ஆகிறதை பக்கத்தில் இருந்து பார்த்த அன்புமணி ராமதாஸ் பதறிபோய்விட்டார்.. உடனே அருகில் சென்று, ஐயா.. கலங்காதீங்க.. எல்லாம் சரியாயிடும்.. 2021-ல் நமக்கு வெற்றி ஆண்டாக அமையும்.." என்று ஆறுதல்படுத்தினாராம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+