ஆளுநரை கண்டித்து திமுக போராட்டத்திற்கு மட்டும் ஒரே நாளில் எப்படி அனுமதி? ஹைகோர்ட்டில் பாமக வழக்கு
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து விதிகளை மீறி போராட்டம் நடத்தும் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மனுத் தாக்கல் செய்ய பா.ம.க.வுக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பா.ம.க. அனுமதி கோரியது. ஆனால், ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல் துறை, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைதும் செய்தது.

காவல் துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து பா.ம.க. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
இந்த பின்னணியில், ஆளுநரை கண்டித்து நேற்று போராட்டம் அறிவித்த ஆளும் திமுகவுக்கு இன்று போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும், எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் பா.ம.க. தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார்.
விதிகளை மீறி போராட்டம் நடத்தும் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் பாலு கேட்டுக் கொண்டார்.
அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, மனுத்தாக்கல் செய்து, எண்ணிடப்படும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications