ரஷ்யாவில் தவித்த தமிழ்நாட்டு மாணவர்களை மீட்ட சோனு சூட் - டாக்டர் ராமதாஸ் பாராட்டு
கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்கோவில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்களை தனி விமானம் அனுப்பி மீட்டு வந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். அவரது தொடர் சேவை வியக்க வைக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்
சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ரியல் ஹீரோவாக இருக்கிறார். உதவி என்ற குரல் கேட்கும் இடங்களில் எல்லாம் ஓடோடி சென்று உதவி செய்கிறார் சோனு சூட். தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் சிக்கித்தவிப்பதாக தகவல் அறிந்த உடன் தனி விமானத்தை அனுப்பி அவர்களை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். அவரது தொடர்சேவை வியக்க வைக்கிறது என்று பாராட்டியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தங்கி படித்து வந்த மாணவர்கள் லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டார்கள். மொத்தம் 200 பேர் வரக்கூடிய சிறப்பு விமானத்தை விமான நிறுவனம் இயக்கியது. 91 மாணவர்கள் மட்டுமே அங்கே இருந்த நிலையில் மீதமுள்ள 109 காலி டிக்கெட்டுகளை சோனு சூட் சொந்த காசில் வாங்கியிருக்கிறார். மாணவர்கள் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர்.

தமிழ் நடிகர்கள், தொழிலதிபர்கள் யாருக்குமே இது தோன்றவில்லை. வில்லன் நடிகராக இருந்தாலும் கொரோனா பேரிடர் காலத்தில் ஹீரோவாக மாறியுள்ளார் சோனு சூட். சமூக வலைத்தளங்களில் சோனுசூட்டிற்கு தினசரியும் பாராட்டு மழைதான்.

நடிகர்களை பெரிதும் பாராட்டி புகழாத பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடிகர் சோனு சூட்டின் செயலுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த பல வாரங்களாக தவித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை இந்தி திரைப்பட நடிகர் சோனுசூட் சொந்த செலவில் தனி விமானம் அமர்த்தி சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது தொடர் சேவை வியக்க வைக்கிறது. பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications