நாட்டில் வெட்டி புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை.. ராமதாஸ் சூசக டிவிட்.. யாரை தாக்குகிறார்?
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்திருக்கும் டிவிட் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்திருக்கும் டிவிட் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. திமுக கூட்டணிக்குள் ஏற்பட்டு இருக்கும் சிறிய சலசலப்பு. விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக இடையே ஏற்பட்டு இருக்கும் சின்ன விரிசல்.

பா.ரஞ்சித்தின் ''தனி தொகுதி'' குறித்த அரசியல் பேச்சு. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் பதில் என்று தொடர்ச்சியாக நிறைய விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சைலண்ட் மோடில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து டிவிட் ஒன்று செய்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை. புதிது புதிதாக புரட்சியாளர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளர்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என்றால் அது வெட்டி வேலை செய்யும் புரட்சியாளர்களால் தான் சாத்தியம் ஆகும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை. புதிது புதிதாக புரட்சியாளர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளர்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என்றால் அது வெட்டி வேலை செய்யும் புரட்சியாளர்களால் தான் சாத்தியம் ஆகும்!
— Dr S RAMADOSS (@drramadoss) December 9, 2018
ராமதாஸின் இந்த கருத்து அரசியல் களத்தில் நிறைய விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சாதியையும், அரசியலையும் மையமாக வைத்து தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் எதை பற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை என்று இவர் யாரை குறிப்பிடுகிறார், யாரை மறைமுகமாக தாக்குகிறார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications