"மிக பெரிய பற்று இருக்கு, ஆனால்.." கருணாநிதி பேனா நினைவு சின்னம்.. ராமதாஸ் என்ன சொன்னார்
கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து ராமதாஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னை: நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்துள்ள 2023-24 ஆம் ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் வெளியிடப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ் கருணாநிதி நினைவிடம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்
ஒவ்வொரு ஆண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு மத்தியில் ஏற்கனவே பிப்.1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தமிழக அரசின் பட்ஜெட்டை வரும் 20ஆம் தேதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் பெண்களுக்கான உரிமை தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.

பாமக
இதற்கிடையே தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை என்று அறிக்கை வெளியிடப்படும். அதன்படி இன்று பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனர்.

நிழல் நிதிநிலை அறிக்கை
பாமக வெளியிட்டுள்ள இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள்... தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக மாற்ற மே 1 முதல் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாது என்றும் இதுதொடர்பான என்.எல்.சி.யின் கோரிக்கைகளைத் தமிழக அரசு ஏற்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்புகள்
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தமிழக அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்
இது மட்டுமின்றி, சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நினைவிடம் இருக்கும் இடத்திலேயே கருணாநிதிக்குப் பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடலில் சிலை அமைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்திலுள்ள ஆளுநர், ஆளுநரே இல்லை என்று சாடிய அவர் தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்குக் கையெழுத்திடாமல் உள்ளார் என்று விமர்சித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications