இதய பரிசோதனை.. பாமக நிறுவனர் ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திடீரென்று சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே உள்கட்சி பிரச்சனை பூதாகரமாக நடந்து வருகிறது. இப்படியான சூழலில் ராமதாஸ் இதயம் சார்ந்த பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ். டாக்டரான இவருக்கு வயது 86 ஆகிறது. இந்நிலையில் தான் ராமதாஸ் இன்று திடீரென்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ராமதாஸ் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனை சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதயம் சார்ந்த பிரச்சனைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு நாளை மாலையில் ராமதாஸ் டிஸ்சார்ஜ் ஆவார் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது பாமக இருஅணியாக செயல்பட்டு வருகிறது. ராமதாஸ்க்கும், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. அன்புமணியை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார். பாமக தலைவராக நானே இருப்பேன். கட்சி சார்ந்த முடிவுகளை நானே எட்பபேன் என்று கடந்த மே மாதம் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து பதவியை பறித்து வருகிறார் ராமதாஸ். அதோடு ராமதாஸ், புதியவர்களை கட்சி நிர்வாகிகளாக நியமனம் செய்து வருகிறார். ஆனால் அன்புமணி தரப்பினரோ, ராமதாஸின் நீக்கம் செல்லாது என்று தனியாக செயல்பட்டு வருகிறார். இதனால் பாமக இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் ராமதாஸ் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications