• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிக்கிறது.. ஆனால் சோர்வளிக்கவில்லை.. ராமதாஸ்

|

சென்னை: தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் சோர்வளிக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் அதிமுக கூட்டணியில் பாமக 20 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கிறது.

75 வயதில் முதல்முறையாக MLA.. 1980-லிருந்து கஜினி முகமது போல் படையெடுப்பு.. சாதித்த பாஜகவின் காந்தி.!

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறுகையில் ''தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

பாமகவுக்கும், அக்கட்சி இடம் பெற்றிருந்த அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை பாமக முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

ஆட்சி

ஆட்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தோல்வியடைந்ததற்கான காரணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றைச் சரி செய்யவும், அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

கட்சி

கட்சி

பாமக கடந்த காலங்களைப் போன்று ஆக்கபூர்வமான கட்சியாக மக்கள் பணியைத் தொடரும். பாமக போட்டியிட்ட தொகுதிகளில் பாமக மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அளித்த உழைப்பும், ஒத்துழைப்பும் இணையற்றவை.

வாக்களித்த மக்கள்

வாக்களித்த மக்கள்

இத்தேர்தலில் அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணியாற்றிய அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
 
 
English summary
PMK Founder Ramadoss expresses his thanks to all the voters of Tamilnadu. He also felt very sad about the results of the election.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X