டெங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை! தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தணும்! -ராமதாஸ்
சென்னை: டெங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று வேதனைத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது;

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த கேரள மாநிலம் பசும்பாரா பகுதியைச் சேர்ந்த இந்து என்ற மாணவி காய்ச்சல் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவியின் மறைவுக்கு எந்த வகையான காய்ச்சல் காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடப்பு மாதத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கும், நோய் பாதிப்பு தீவிரமடைவதற்கும் காரணம் ஆகும். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், டெங்கு காய்ச்சலை எவ்வாறு கண்டறிவது? அதற்கு எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் ஏற்படுத்தபடவில்லை.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் பலருக்கு நோய் முற்றிய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் தவிர, போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுடன் உரிய சிகிச்சைகள் பெறாமல் இருக்கலாம். அவர்களுக்கு சரியான மருத்துவம் அளிக்கப்படாத நிலையில், அவர்களின் உடல்நிலை மோசமடையக் கூடும்.
அத்தகைய சூழல் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அந்த முகாம்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications